தெற்குபனையூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
தெற்குபனையூர் சிவன்கோயில்,
தெற்குபனையூர், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610207.
இறைவன்:
சந்திரசேகரர், தான்தோன்றீஸ்வரர்
இறைவி:
வரம்தரும்நாயகி, சிவப்ரியா
அறிமுகம்:
கீவளூரின் தெற்கில் 12 கிமீ தூரத்தில் உள்ளது சாட்டியக்குடி, இதன் தெற்கில் இரண்டு கிமீ தூரத்தில் விடங்கலூர் உள்ளது, அதிலிருந்து நேர் கிழக்கில் 3 கிமீல் உள்ளது தெற்கு பனையூர். இரண்டு தெருக்களே உள்ள சிறிய ஊர். ஊரை ஒட்டிய ஒரு பெரிய குளம், அதன் மேல்கரையில் கிழக்கு நோக்கிய சிவாலயம் இருந்துள்ளது. முற்றிலும் சேதமான நிலையில் அதிலிருந்த இரண்டு சதுரபீட லிங்கமூர்த்திகள் மற்றும் ஒரு நந்தி எடுக்கப்பட்டு ஒரு தகர கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளது, புதிய கோயில் ஒன்றினை உருவாக்க ஊர்மக்கள் முடிவு செய்து சென்னை மகாலட்சுமி அவர்களின் உதவியில் புதிய கோயில் உருவாகிறது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை, தெற்கு நோக்கிய இறைவியின் கருவறை விநாயகர் முருகன் மகாலட்சுமி சன்னதிகளும் பைரவர் சூரியன் சன்னதிகளும் தயாராகி வருகின்றன. இறைவன் – சந்திரசேகரர் இறைவி- வரம்தரும்நாயகி இறைவன்- தான்தோன்றீஸ்வரர் இறைவி- சிவப்ரியா
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெற்குபனையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி