Wednesday Oct 30, 2024

தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில்,

தென்னாங்கூர்,

திருவண்ணாமலை மாவட்டம் – 604 408.

போன்: +91-4183-225 808.

இறைவன்:

பாண்டுரங்கன்

இறைவி:

ரகுமாயீ

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்னங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டுரங்க கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் வடக்கு மற்றும் தெற்கு கட்டிடக்கலைகளின் கலவையுடன் கட்டப்பட்டது. இக்கோயில் ஒரிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலை ஒத்திருக்கிறது மற்றும் அதன் முன் கோபுரங்கள் பல்லவ கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன.

புராண முக்கியத்துவம் :

       மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம். ஞானானந்த சுவாமிகளின் சீடர்ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், நாமாநந்த கிரி சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம்.

கடவுளை உணர்வதற்கும், அடைவதற்கும் வழிபாடு அவசியமாகிறது. அவரவர் தகுதிக்கேற்ப, பிடித்தமான முறையில் கடவுளை வழிபடலாம். இத்தலத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இறைவனை நாம சங்கீர்த்தனம் (பக்திப்பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படுகிறது. ஏனெனில், நாம சங்கீர்த்தனம் தான் ஒருவரை இறைவனிடம் அழைத்து செல்கிறது.

நம்பிக்கைகள்:

குழந்தை பாக்கியத்திற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

அலங்கார கோலம்: பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகே ரகுமாயீ அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் அருள்பாலிக்கிறார்.

ஞாயிற்றுகிழமையில் மதுராபுரி ஆளும் மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமையில் பாததரிசனத்திற்காக மிக எளிமையாக பாண்டுரங்க அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் அருள்பாலித்து வருகிறார்.

புத்தாண்டு வழிபாடு: ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் “விஷுக்கனி உற்சவம்’ என பழ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். கோகுலாஷ்டமியில் முத்தங்கிசேவை நடக்கிறது. இது தவிர ராஜகோபாலனாக, கோவர்த்தன கிரியை கையில் பிடித்திருக்கும் கிரிதாரியாக, கீதை உபதேசிக்கும் கண்ணனாக, தேரோட்டும் பார்த்தசாரதியாக, ராதாகிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தின் விருட்சம் தமால மரம். துவாபர யுகத்தில் கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று தான் புல்லாங்குழல் வாசித்து, அதில் ராதை மயங்கியதாக புராணங்கள் கூறுகிறது. வட மாநிலத்தில் உள்ள இந்த விருட்சம் தென்னகத்தில் இத்தலத்தில் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். இத்தலத்தில் பஞ்சலோகத்தினால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர்.

ஒரிசா மாநிலத்து பூரி ஜகந்நாதர் கோயிலைப்போன்று 120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பலிபீடத்தை தாண்டி 16 கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். மகாமண்டபத்தில் நுழைந்தவுடன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டதைப் போன்ற உணர்வு. இங்கு தான் கோவிந்தராஜப்பெருமாள் திருப்பதியைப்போல், சனிக்கிழமைதவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்கிறார். இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவம் நடத்தப்படுகிறது. கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

திருவிழாக்கள்:

தமிழ் வருட பிறப்பின் போது “விஷுக்கனி உற்சவம். கோகுலாஷ்டமி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தென்னாங்கூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top