தென்னங்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
தென்னங்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
தென்னங்குடி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
திருவாரூர் – நாகூர் சாலையில் 15 வது கிமீல் உள்ள சூரனூர் சென்று அதன் தெற்கில் 3 கிமீ சென்று ஓடாச்சேரியில் கிழக்கு நோக்கி திரும்பி ஒரு கிமீ சென்றால் தென்னங்குடி. வெட்டாற்றின் கரையோரம் தென்னை வளம் மிக்க பகுதி என்பதால் இந்த பெயர். இங்கு பழமையான சிவன்கோயில் ஒன்றிருந்தது, காலப்போக்கில் பழுதடைந்த கோயில், ஒற்றை கருவறைகோயிலாக பல காலம் நீடித்து இருந்தது. அந்த ஒற்றை கருவறை கோயில் சற்றே புனர் நிர்மாணம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு நோக்கியது, இறைவன்- சுந்தரேஸ்வரர் இறைவி – அதே கருவறை முகப்பில் தெற்கு நோக்கி உள்ளார் பெயர் தெரியவில்லை மீனாட்சியாக இருக்கலாம். மண்டபத்தின் முகப்பில் இருபுறமும் மாடங்கள் அமைக்கப்பட்டு விநாயகரும் முருகனும் உள்ளனர். எதிரில் சிறிய மேடை மீது நந்தி உள்ளது. கோயில் சிறிதெனினும் இவருக்கும் ஆகச்சிறந்த அடியார்கள் உள்ளுரில் உள்ளார்கள். சுற்றி நந்தவனம் சுற்றி வர இடம் தூய்மை படுத்துதல், காலை மாலை விளக்கேற்றல் என தம் கைப்பொருள் ஈந்து வருகின்றனர். ஒரு கால பூஜைக்கு அருகாமை ஊர் குருக்கள் வந்து செல்கின்றார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தென்னங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி