துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில், மயிலாடுதுறை
முகவரி :
துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில்,
துலாக்கட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609001.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
துலாகட்டம் காசிவிஸ்வநாதர் கோயில் காவிரிகரையை நோக்கி செல்லும்போது, இடதுபுறம் ஒரு அலங்கார வளைவு ஒன்று உள்ளது சற்று சிறிய சந்துபோல உள்ளது, வாயிலை ஒட்டி மலைக்கோயில் ஒன்றும் உள்ளது. இரும்பு கம்பி கதவுகளை ஒட்டி வலதுபுறம் படிகளேறி சென்றால் கட்டுமலைமேல் பாலதண்டாயுதபாணியாக முருகன் உள்ளார். காசிவிஸ்வநாதர் கோயில் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது,.. இது சமீப குடமுழுக்கில் உருவானது. அதன் வழி உள்ளே சென்றால் கோயில் வளாகம் ஒருஏக்கர் பரப்பளவில் உள்ளது. கோயில் ஆதீன கர்த்தர் காசி சென்று திரும்பியதன் நினைவில் கட்டப்பட்ட கோயில் இதுவாகும். இதன் விமானமே இதன்சிறப்பம்சம் ஆகும். ஒரு ஸ்தூபி போன்று வடநாட்டு பாணியில்அமைக்கப்பட்டுள்ளது கருவறை விமானம்.
இறைவன், இறைவி இருவரது கருவறை முன்னர் அர்த்தமண்டபம் முகமண்டபம் நந்தி கொடிமரம் கொடிமர விநாயகர் என விதிப்படி கட்டப்பட்ட கோயில். இறைவன் காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், அம்பிகை காசி விசாலாட்சி தெற்கு நோக்கியும் உள்ளார். இறைவனுக்கு எதிரில் உயர்ந்த கொடிமரமும், நந்தி பலி பீடம் ஆகியனவும் உள்ளன. அதிட்டானம்.வரை கருங்கல் பணிகளும், அதற்க்கு மேல் செங்கல் பணியாகவும் உள்ளது இக்கோயில் .கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முககடவுள், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை என உள்ளனர். மேற்கு திருமாளபத்தியில் வரசித்திவிநாயகர், முருகன், இதன் அடுத்த சன்னதியாக சப்தமாதர்களும், அவர்களுக்கு இருபுறமும் விநாயகர் மற்றும் வீரபத்திரரும் உள்ளனர். ஞான சரஸ்வதியும் நால்வரும் உள்ளனர். இவை சமீப குடமுழுக்கின் போது புதிதாக உருவாக்கப்பட்டவை அடுத்து ஞானேஸ்வரர், ஞானேஸ்வரி என சிறிய மூர்த்திகள் உள்ளன.ஞானேஸ்வரி அருகில் திருமால் பாதம் உள்ளது. அடுத்த சன்னதியில் மகாலட்சுமி.உள்ளார். பைரவர், நவகிரகங்கள் வடகிழக்கில் உள்ளார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
துலாக்கட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி