துறையூர் சௌந்தரேஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
துறையூர் சௌந்தரேஸ்வரர் சிவன் கோயில்,
துறையூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்:
சௌந்தரேஸ்வரர்
இறைவி:
சௌந்தர்யநாயகி
அறிமுகம்:
திருமருகல் > மருங்கூரில் இருந்து பிறாவுடை ஆற்றின் கரையிலே நரிமணம் சாலையில் 2 கிமீ சென்றால் துறையூர் அடையலாம். ஊரின் முகப்பிலேயே சிவன்கோயில் உள்ளது. பழமையான கோயில் சிதைவடைந்த பின்னர் எழுப்பபட்ட புதியகோயில் இதுவாகும். மேற்கு நோக்கிய கோயில் கொண்டுள்ள இறைவன் சௌந்தரேஸ்வரர் இறைவி தெற்கு நோக்கிய சௌந்தர்யநாயகி இரு கருவறைகளையும் இணைக்கும் வண்ணம் ஒரு தகர கொட்டகை போடப்பட்டுள்ளது. அதில் நந்தி பலிபீடம் உள்ளது.
சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் இரு துணைவியாருடன் முருகன் உள்ளனர். கருவறை கோட்டங்களில் தக்ஷ்ணமூர்த்தி மட்டும் உள்ளார். அவரது சிற்ப அழகை பார்த்தால் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. தனது 37 வது ஆட்சியாண்டில் நிபந்தம் கொடுத்த துண்டு கல்வெட்டு ஒன்றுள்ளது. இது 11 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது எனலாம். கோயிலின் நேர் பின்புறம் ஒரு குளம் உள்ளது. இதே வளாகத்தில் வடக்கு நோக்கிய ஒரு மாரியம்மன் கோயிலும் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
துறையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி