Tuesday Jul 02, 2024

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி

அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர் – 600 019, சென்னை மாவட்டம்.

இறைவன்

இறைவன்:ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர் இறைவி: வடிவுடையாம்பிகை (திரிபுரசுந்தரி அம்மன்)

அறிமுகம்

ஆதிபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

புராண முக்கியத்துவம்

வைகுண்டத்தில்எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. “”நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்” என்று பரந்தாமனிடம் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு, “”அந்நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழைக்கப்படும். அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, படைக்கும் தொழிலை தொடர்வாயாக” என்றார் பெருமாள்.பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார். உலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக ஆழி சூழ்ந்த கடல் நீரை “ஒத்தி’ (விலகி) இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் “ஒத்தியூர்’ எனப்பட்டது. காலப்போக்கில் “ஒற்றியூர்’ என மாறியது.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் 27 நட்சத்திரங்களும் சிவபெருமானை வழிபட்டன. அந்த நட்சத்திரங்களை லிங்கங்களாக மாற சிவன் அருள்பாலித்தார். அந்தந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்க

சிறப்பு அம்சங்கள்

மாந்தாதான் என்ற மன்னனுக்கு அதிக வயதாகிவிட்டது. ஆனாலும் இறப்பு வரவில்லை. பாவம் செய்தாவது இறந்துபோவோம் என கருதினான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் அநியாய வரி விதித்தான். இது சம்பந்தமான ஓலை சிற்றரசர்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஓலையில் யாரும் அறியாமல், “”ஒற்றியூர் நீங்கலாக” என திருத்தி எழுதினார் சிவன். இதன் பிறகு அந்த மன்னன் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு வரியை விலக்கினான். நீண்டகாலம் பூமியில் வாழ்ந்தான். எந்தச்சூழ்நிலையிலும் விரக்தி அடையக்கூடாது என்பதை இத்தலம் காட்டுகிறது. திருவொற்றியூர் கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை ணீ தலையில் தெளித்தாலே பாவங்கள் நீங்கிவிடும். பாவ மன்னிப்பு கேட்காமலேயே பாவங்களை தீர்க்கும் தலம் திருவொற்றியூர். இவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும், சிதறிக்கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது. பட்டினத்தார் இங்குதான் ஜீவச ஜீ மாதி அடைந்தார். இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். மாசி மக திருவிழாவின் பத்தாம் நாளில் இந்த சன்னதியில் 18 வகை நடனகாட்சி நடக்கிறது.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவொற்றியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவொற்றியூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top