திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல்மாடக்கோயில், ஆடுதுறை – 612 101, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 435 – 246 5616
இறைவன்
இறைவன்: வைகல்நாதர் இறைவி: வைகலாம்பிகை
அறிமுகம்
வைகல் மாடக்கோயில் – வைகல்நாதர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 33ஆவது சிவத்தலமாகும். வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. தல விருட்சம்:செண்பகம் தீர்த்தம்:செண்பக தீர்த்தம்
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். இவளது வேண்டுகோளை ஏற்ற பெருமாள் பூமிதேவியை திருமணம் செய்து கொண்டார். இதனால் மகாலட்சுமிக்கு பெருமாள் மீதுகோபம் ஏற்பட்டது. எனவே லட்சுமி தேவி செண்பகவனம் எனும் இத்தலத்தை அடைந்து கடும் தவம் செய்தாள். பெருமாளும், பூமி தேவியும் பிரிந்து போன லட்சுமியை காண இத்தலம் வந்தனர். இவர்களை தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள் லட்சுமி, பூமாதேவி இருவரையும் மனைவியராகப்பெற்றார்.
நம்பிக்கைகள்
கேட்டதெல்லாம் கொடுக்கும் இறைவன். பிரார்த்தனை நிறைவேறியதும் தினசரி பூஜைக்கு ஏற்ற பொருளுதவி அளிக்கலாம்.
சிறப்பு அம்சங்கள்
இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 96 வது தேவாரத்தலம் ஆகும். கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. வைகல் என்ற ஊரில் கட்டப்பட்ட மாடக்கோயிலாக விளங்குவதால் “வைகல் மாடக்கோயில்’ ஆனது. இவ்வூரில் சிவனது மூன்று கண்ணைப்போல் மூன்று கோயில் உள்ளன. வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி சமேத பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும். தன் குட்டியை தேடி வருந்திய யானை, தனது தந்தத்தால் இங்கிருந்த ஈசல் புற்றை காலால் மிதித்து சேதப்படுத்தியது. தன் புற்றிணை மிதித்து அழித்த யானையின் உடலை ஈசல் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானைக்குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது.
திருவிழாக்கள்
மாசி சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னபிஷேகம். சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் சிறப்பாக நடக்கிறது.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவைகல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி