திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர் போஸ்ட்- 609808 மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364-237 650.
இறைவன்
இறைவன்: கோமுக்தீஸ்வரர் இறைவி: ஓப்பிலாமுல்லையம்மை
அறிமுகம்
திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 36ஆவது சிவத்தலமாகும். மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் திருவாவடுதுறை எனும் ஊரில் புராண பெருமைகள் நிறைந்த கோமுக்தீசுவரர் (மாசிலாமணி ஈசுவரர்) கோயில் அமைந்துள்ளது இக்கோயில், ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. வடக்குப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை – கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். மூலவர் சுயம்பு மூர்த்தி. மிகப்பெரிய நந்தி , திருமூலரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது. இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 99 வது தேவாரத்தலம் ஆகும்.
புராண முக்கியத்துவம்
ஒருமுறை பரமேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில், பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு ஆதரவாக சிவனை குறை கூறினார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால் தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால் பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில் எழுந்தருளினார். எனவே இவ்வூரிலுள்ள பெருமாளின் பெயர் “ஆமருவியப்பன்’ என்றானது. பசுவாக மாறிய பார்வதி பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு கடைசியில் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு அழகிய உருவம் பெற்றாள். “சவுந்தர்ய நாயகி’ என இவளை அழைத்தனர். தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் அதற்கான அருளாசி பெறலாம். பார்வதியை பசுவாக சபித்த சிவன் வருத்தமடைந்து இங்கு வந்து வேதியர்களுக்கு வேதம் சொல்லித் தந்தார். எனவே இங்குள்ள இறைவனின் திருநாமம் “வேதபுரீஸ்வரர்’ என்பதாகும்.
நம்பிக்கைகள்
தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் மாøல் 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 101 வது தேவாரத்தலம் ஆகும். அகத்திய முனிவர் இத்தல இறைவனை பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது இதை அறியாத ஊர்த்துவரதன் என்னும் அரசன் வான் வெளியில் தேரை செலுத்தினான். அந்த தேர் செல்லாது அழுந்திய காரணத்தால் இத்தலம் தேரழுந்தூர் ஆனது. சிறப்பம்சம்: இத்தல இறைவனை வேதங்கள், தேவர்கள், அஷ்ட திக் பாலகர்கள், முனிவர்கள் பூஜை செய்துள்ளனர். சிவனும், பெருமாளும் சொக்கட்டான் விளையாடிய மண்டபம் இன்னமும் உள்ளது. சிவனும் சக்தியும் பிரிந்த காலத்தில், அவர்களை சந்திக்க இந்திரன் முதலான தேவர்கள் இங்கு வந்தனர். ஆனால் நந்தி அவர்களை சிவனை சந்திக்க அனுமதிக்கவில்லை. எனவே அஷ்டதிக் பாலகர்களும் இந்த ஊரைச்சுற்றி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த அஷ்ட லிங்கங்கள் இன்றும் உள்ளன. காவிரிக்கும், அகஸ்தியருக்கும் இங்கு சாபவிமோசனம் கிடைத்ததால் இருவருக்கும் தனித் தனி சன்னதி உள்ளது
திருவிழாக்கள்
புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னபிஷேகம்.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாவடுதுறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி