திருவாலங்காடு உத்பலேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
திருவாலங்காடு உத்பலேஸ்வரர் திருக்கோயில்,
திருவாலங்காடு, குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609810.
இறைவன்:
உத்பலேஸ்வரர்
இறைவி:
உத்பலாம்பிகை
அறிமுகம்:
மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் உள்ள குத்தாலம் தாண்டி 2 கிலோமீட்டர் தூரத்தில் திருவாலங்காடு உள்ளது. திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதே.
இந்த வடாரண்யேஸ்வரர் கோயிலின் வடக்கில் செல்லும் காவிரியாற்று சாலையில் உள்ளது கிழக்கு நோக்கிய அக்ரஹார சிவன்கோயில். சிறிய சிவாலயம் தான், மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டுள்ளது. இறைவன் உத்பலேஸ்வரர் கிழக்கு நோக்கியும் இறைவி உத்பலாம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர்.
உத்பலம் என்றால் தாமரை, தாமரை போன்ற மென்மையான மனதுடைய இறைவன் இங்கே உள்ளார். பெரிய தாமரை குளத்தின் அருகில் இருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம். இறைவன் வாயில் அருகில் பெரிய விநாயகர் உள்ளார், அருகில் நந்தி உள்ளது. சிறிய பிரகாரம் கொண்ட இக்கோயிலில் முருகன், கஜலெட்சுமி, விநாயகர், ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், தக்ஷண மூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. கோயிலின் நேர்த்தியை பார்த்தால் நகரத்தாரால் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. மாலையில் விளக்கு ஏற்றுதல் மட்டும் அருகிலுள்ளோர் செய்கின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாலங்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி