திருவாரூர் கீழவீதி கைலாசநாதர் திருக்கோயில்
முகவரி :
கீழவீதி கைலாசநாதர் திருக்கோயில்,
கீழவீதி, திருவாரூர் நகரம்,
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
மாணிக்கவல்லி
அறிமுகம்:
திருவாரூர் பெருங்கோயிலின் கீழவீதியில் தேரடியின் அருகில் உள்ளது இந்த கைலாசநாதர் கோயில். மேற்கு நோக்கிய இறைவன், இறைவி தெற்கு நோக்கியவர், கோயில் சிறிய கோயில் தான் எனினும் பழமையானது. பெரிய கோயிலின் தொன்மைக்கு நிகரானது என்கின்றனர். இறைவன் மேற்கு நோக்கிய கைலாசநாதர் தெற்கு நோக்கிய மாணிக்கவல்லி அம்பிகை. கருவறை வாயிலில் நவக்கிரக விநாயகர் எனும் விநாயகர் உள்ளார், அருகில் பாலமுருகன் உள்ளார் அது மட்டுமன்றி இங்கே சங்கு சக்கரங்களுடன் ஆஞ்சநேயர் இக்கோயிலில் இருந்து அருள்பாலிக்கிறார். குபேர காலபைரவர், சண்டேசர் ஆகியோரும் உள்ளனர்.
புராண முக்கியத்துவம் :
ஒரு முறை பிரம்மன் காமதேனுவிடம் இருந்து பெற்ற நெய்யை கொண்டு யாகம் வளர்த்தார், அக்னி அந்த நெய்யை தேவைக்கு அதிகமாக உள்வாங்கிக்கொண்டே இருந்தான், அதிகப்படியான நெய்யை குடித்ததால் அக்னிக்கு பாண்டு ரோகம் வந்துவிடுகிறது. அக்னியால் அதன் பின்னர் எவர் வளர்க்கும் யாகத்திலும் சென்று நெய்யை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதனால் பிரம்மனும் பிற தேவர்களும் அக்னியின் மனைவியரும் வருத்தமடைந்தனர். இதற்கு என்ன செய்வது என கேட்டபோது வியாச முனிவர் திருவாரூர் கமலாலய குளத்தின் நீராடி பின்னர் இந்த தலத்தில் இருக்கும் சுயம்பு மூர்த்தமாக இருக்கும் கைலாசநாதரை வழிபடவேண்டும் என கூறினார். அவ்வாறே அக்னியும் செய்து இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டான். அதனால் அக்னி உபாதைகளில் இருந்து விடுபட இத்தல இறைவனை வழிபடலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி