திருவாரூர் கருணாபுரீஸ்வரர் திருக்கோயில்
முகவரி :
கருணாபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருவாரூர் நகரம்,
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
கருணாபுரீஸ்வரர்
இறைவி:
ஞானாம்பிகை
அறிமுகம்:
சோழ தேசத்தின் மிகச் சிறந்த நகரங்களில் திருவாரூர் முக்கியமானது. இந்நகரத்தின் அஷ்ட திக்குகளிலும் தீர்த்தங்களும் சிவாலயங்களும் உள்ளன, இவை சித்தர்களாலும் ஞானிகளாலும் முனிவர்களாலும் தேவர்களாலும் வழிபடப்பட்டவை. அவற்றில் ஒன்று தான் இந்த கருணாகரேஸ்வரர் திருக்கோயில். பெருங்கோயிலின் வடக்கு வீதியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலை புதுதெரு எனப்படுகிறது, இந்த தெருவில் கிழக்கு நோக்கி உள்ளது இந்த சிவன்கோயில். இறைவன் கருணாகரேஸ்வரர் இறைவி ஞானாம்பிகை.
சிறிய ராஜகோபுரம் போன்ற அமைப்புடன் கூடிய நுழைவாயிலுடன் உள்ளது திருக்கோயில். சிறிய கோயில் தான் எனினும் தேடிவரும் அன்பர்களுக்கு ஞானமும் கல்வியும் தரக்கூடிய ஞானாம்பிகை குடிகொண்டுள்ள இடம், அன்பும் அருளும் தரக்கூடிய இறைவன் கருணாகரன் சிறிய கருவறை கொண்ட அழகிய இறைவன் தெற்கு நோக்கிய அம்பிகை இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிறிய மாடங்களில் உள்ளனர். எதிரில் சிறிய நந்தி பலிபீடம் உள்ளது. பிரகாரத்தில் நர்த்தன விநாயகர் ஒரு சன்னதியிலும் அடுத்து மகாலட்சுமி ஒரு சன்னதியிலும் உள்ளனர். சண்டேசர் தனியாக சிறு கோயில் கொண்டுள்ளார்.
காலபைரவர் ஒரு மாடத்திலும் அருகில் வள்ளலார்? ஒரு மாடத்திலும் உள்ளனர். சாலையின் மட்டம் மேலேறி மழைக்காலங்களில் கோயில் உள்ளேயே தண்ணீர் நிற்கிறது, பூச்சு உதிர்ந்து செங்கல் கரையும் நிலையில் சுவர்கள் உள்ளன. கோயில் கருவறை கட்டுமானம் அதிக பழுதடைந்து நிற்கிறது, ஐம்பது வருடங்களுக்கு மேலாகிறது குடமுழுக்கு கண்டு என்கிறார்கள்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி