திருவாங்காடு இராமசாமி திருக்கோயில், கேரளா
முகவரி
திருவாங்காடு இராமசாமி திருக்கோயில் , திருவாங்காடு, இல்லதழா, கிழக்கு தலச்சேரி, கேரளா மாநிலம் – 670103.
இறைவன்
இறைவன்: இராமசாமி
அறிமுகம்
திருவாங்காடு இராமசாமி கோயில் என்பது கேரளத்தின் தலச்சேரியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு இராமர் கோயில் ஆகும். இத்த கோயிலின் கூரை செப்புத் தகடுகளினால் வேயப்பட்டுள்ளதால் பொதுவாக இது பித்தளை பகோடா என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சில சுவாரஸ்யமான செதுக்கு சிற்பங்கள் உள்ளன. கோயிலின் ஆண்டு விழா மேடத்தில் (ஏப்ரல்-மே) விஷூ நாளில் தொடங்கி ஏழு நாட்கள் நடக்கும். கேரளத்தில் இராமனுக்கு கட்டபட்ட முதன்மையான ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஒரு எக்டேர் பரப்பளவில் பரவியிருக்கும் சிரா என்று அழைக்கப்படும் கோயில் குளத்துடன் சேர்த்து 2.75 ஹெக்டேர் பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது, நன்கு பராமரிக்கப்படும் இந்த கோவிலில் சிறந்த மர வேலைப்பாடுகள், சுடுமண் கலை வேலைகள், கூரைகளில் மர பலகைகளில் வரையபட்ட சுவரோவியங்கள் போன்ற கலை புதையலின் களஞ்சியமாக உள்ளது. கோயிலின் பெரிய குளமானது பக்தர்களுக்கு பயனுள்ளதாகும். சத்திரம், விருந்தினர் மாளிகை, கல்யாண மண்டபம் ஆகியவை நன்கு பராமரிக்கப்படுகின்றன.
புராண முக்கியத்துவம்
18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானின் படைகளினால் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. இது பதினெட்டாம் நூற்றாண்டில் தலைச்சேரிக் கோட்டையின் புறக்காவல் நிலையங்களில் ஒன்றாக இருந்தது. இதன் எல்லைப் பகுதிக்குள் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளுக்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் இடையே பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பல அரசியல் ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டன. இந்த ஆலயத்தின் தோற்றம் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. கேரளோல்பத்தி மற்றும் மலபார் கையேட்டு போன்றவற்றில் உள்ள சில குறிப்புகளைத் தவிர இந்த கோயிலின் பழமையை நிர்ணயிக்க எந்த பதிவுகளும் கிடைக்கவில்லை. கேரள மகாத்மியத்தின் கூற்றுப்படி, இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமரால் பிரதிஷ்ட்டை செய்யபட்டுள்ளது என்று குறிப்பிடபட்டுள்ள. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என் செவிவழிசெய்திகள் குறிப்பிடுகின்றன.
சிறப்பு அம்சங்கள்
இத்த கோயிலின் கூரை செப்புத் தகடுகளினால் வேயப்பட்டுள்ளதால் பொதுவாக இது பித்தளை பகோடா என்று அழைக்கப்படுகிறது. கேரளத்தில் இராமனுக்கு கட்டபட்ட முதன்மையான ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
திருவிழாக்கள்
இக்கோயிலின் மிக முக்கியமான திருவிழா விஷு மஹோத்சவம் ஆகும். இந்த திருவிழாவானது கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாநாட்களில் நாள்தோறும் யானை ஊர்வலங்கள், சிறப்பு பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளாக ஏழு நாட்கள் நீடிக்கும். கடைசி நாளில் கோயில் குளத்தில் ஆறாட்டு விழா அதாவது கோயில் குளத்தில் தெய்வத்தை குளிப்பாட்டுவது நடக்கும். கோயிலின் வழிபாட்டு சடங்குகளில் கதகளி, சாக்கைக் கூத்து போன்றவை எல்லா நாட்களிலும் கோயிலில் செய்யப்படுகிறது. கோயில் சடங்குகளின் ஒரு பகுதியாக இந்த கோயிலில் சாக்கைக் கூத்து நடத்தப்படுகிறது. மலையாள நாட்காட்டி மாதமான மகரத்தில் திருவோணம் நாளில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான நிகழ்வு பட்டதனம் ஆகும். இங்கு மேற்கொள்ளப்படும் முக்கியமான, பிரபலமான வழிபாடு என்பது கலாபம் சர்தால் என்பவை ஆகும். வலியவத்தல பாயாசம், அவல் நைவேத்யம் ஆகியவையும் முக்கியமாகும்.
காலம்
2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாங்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
தலச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்
கன்னூர்