திருவல்லிக்கேணி ஸ்ரீ வீரஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், சென்னை

முகவரி :
அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில்,
நம்பர் 10, மேயர் சிட்டிபாபு தெரு,
திருவேட்டீஸ்வரன்பேட்டை, திருவல்லிக்கேணி,
சென்னை – 600005. தொடர்புக்கு: 96064 26934
(திருவேட்டீஸ்வரர் கோயிலின் பின்புறத்தில் இந்த அனுமன் கோயில் உள்ளது)
இறைவன்:
ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி
அறிமுகம்:
திருவல்லிக்கேணி, மேயர் சிட்டிபாபு தெருவில் இருக்கக்கூடிய, வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “ ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்’’ கோவில் உள்ளது. மேயர் சிட்டிபாபு தெருவில் நுழைந்து, சற்று நடுப்பகுதியை அடைந்ததும். வண்ணமயமான வடக்கு நோக்கி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலின் கோபுரம் அமைந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
“ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை செய்த 732 வீர ஆஞ்சநேயர்களில் (இந்தியா முழுவதிலும்) இந்த திருக்கோயிலில் காட்சியளிக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரும் ஒன்று’’ என்றும், கி.பி. 1522ல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் என்றும் கோயிலின் கல்வெட்டும் கூறுகிறது.
கல்வெட்டு இருக்கும் இடத்தின் சற்று தொலைவில், சிறிய அளவிலான விநாயகர் சந்நதி இருக்கின்றது. விநாயகர் சிறிய வடிவிலானாலும், அவரிடம் மனமுருகி வேண்டிக்கொண்டால் பலன்கிட்டும் என்கிறார்கள். மூலவரான ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அருகில், உற்சவர் அனுமனும் வீற்றிருக்கிறார். இக்கோயிலில், அனுமன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரான வீர ஆஞ்சநேயஸ்வாமி, அவருடன் உற்சவர் இவை தவிர, கோயிலில் எட்டு சாளக்கிராமங்கள் இருக்கின்றன. அவைகளில் குறிப்பிட்டு சொல்லவேண்டு மெனில், மத்வரின் குருவான வேதவியாஸரின் சாளக்கிராமம், நரசிம்மர் சாளக்கிராமம் ஆகியவை இந்த கோயில் சிறப்பினில் ஒன்று.
தினம்தோறும் முதலில் சாளக்கிராமங்களுக்கு அபிஷேகங்களை செய்து, அந்த அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அனுமனுக்கு கொடுக்கிறார்கள். அனுமனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்வதைவிட, சந்தனத்தால் அபிஷேகம் செய்வதைவிட, சாளக்கிராமத்திற்கு செய்த அபிஷேக நீரைக்கொண்டு, ஒரே ஒரு உத்தரணியால் அனுமனுக்கு அபிஷேகம் செய்தால் போதும், அவன் மனம் குளிர்கிறது. இந்த திருக்கோயினுள், மிகப்பெரிய மரம் ஒன்று உள்ளது. அதன் ஒரு பகுதியில் நாகரர்கள் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்
திருவிழாக்கள்:
ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றன.

காலம்
கி.பி. 1522
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவல்லிக்கேணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை