Wednesday Dec 18, 2024

திருமெய்ஞானம் (திருநாலூர் மயானம்) ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் நாலூர் மயானம், திருச்சேறை அஞ்சல் – 612 605 குடவாசல் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 94439 59839

இறைவன்

இறைவன்: ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர் இறைவி: ஞானாம்பிகை, பெரிய நாயகி

அறிமுகம்

திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 96ஆவது சிவத்தலமாகும். திருநாலூர் மயானம் என்றழைக்கப்படுகிறது. கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள விமானத்தைக் கொண்ட இக்கோயில் வித்தியாசமான அமைப்பில் அமைந்துள்ளது. தல விருட்சம்: பலாசு, வில்வம் தீர்த்தம்: ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம்

புராண முக்கியத்துவம்

சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் “நால்வேதியூர்’ என்று வழங்க தொடங்கி “நாலூர்’ என்று மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று. மற்ற மூன்றும் 1. கச்சி மயானம், 2. கடவூர் மயானம். 3. காழி மயானம் என்பவை.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்க, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 159 வது தேவாரத்தலம் ஆகும். சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. சோழர் காலக் கலைப்பணியைச் சேர்ந்தது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது. சிகரம் உருண்டை வடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை.

திருவிழாக்கள்

தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி, மாசி, மார்கழி மாதங்களில் உற்சவம் நடைபெறுகிறது.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமெய்ஞானம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top