Sunday Nov 24, 2024

திருமால்பூர் கோனார் கோவில்

முகவரி

திருமால்பூர் கோனார் கோவில், திருமால்பூர், காஞ்சிபுரம் – 631 051.

இறைவன்

பெருமாள்

அறிமுகம்

உலகில் வேறு எங்கும் காண முடியாத முழுவதும் பச்சை நிற கற்களை கொண்டு கட்டப்பட்ட திருமால்பூர் கோனார் கோவில் இந்த ஆலயம் முழுவதும் எழுத்துக்கள் காணப்படுகின்றன இந்த ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இக்கோயில் திருமாற்பேறு மணிகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கில் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பச்சை நிற கற்களை பெரும்பாலான கோவில் கட்டுமானங்களில் பயன்படுத்துவது இல்லை தஞ்சை பெருவுடையார் கோவிலில் கூட தாது மணல் கலந்த கற்கள் தான் என கூறப்படுகிறது ஆனால் கோனார் கோவிலில், பச்சை நிற கற்கள் தான் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன கோவிலை சுற்றியுள்ள மேற்புற துாண்களில் யாளி வீரர்களின் சிற்பம் அற்புதமாக உள்ளது. மொத்தத்தில், ஆட்களை வசீகரிக்கும் கோவிலாக கோனார் கோவில் திகழ்கிறது. இந்த கற்கோவிலை சீரமைப்பு என்ற பெயரில், புராதன வட்டெழுத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதனால், வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

1300 ஆண்டுகள் பழமையானது. முதலாம் பராந்தக சோழனின் காலத்தில் கட்டப்பட்ட கற்றளியாகும். கோவில் கருவறை முகமண்டப கபோதத்தில், ஒவ்வொரு மூலையிலும் கபோதக்கூடும், கொடிக்கருக்கும் சந்திர மண்டலமும் காணப்படுகின்றன. முக மண்டப நுழைவாயிலில், இடது புறம் முதல் பராந்தகரின் மதுரை கொண்ட கோப்பரகேசரி கல்வெட்டு உள்ளது. குறுஞ்சிற்பங்கள் பெரும்பாலும் திருமாலின் அவதாரங்களாகவே காட்டப்பட்டுள்ளன. அவற்றில், கண்ணனின் குடக்கூத்து, கோவர்த்தனகிரிதாரர், உரலில் கட்டிய கண்ணன், வெண்ணை திருடும் கண்ணன், ஆலிலைக்கண்ணன் முதலிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளதாக வரலாறு ஆய்வாளர்கள் தன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோவில் முழுவதும் பச்சை நிறக் கற்களால் கட்டப்பட்டு இருப்பது இதன் சிறப்பு தன்மையாக உள்ளது. சுவர் முழுவதும் கட்டுமான கற்களில் வட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவில் கருவறைக்குள் சுவாமி சிலைகளும் இல்லை, விலை உயர்ந்த ஆபரணங்களும் இல்லை. சென்னை தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த கோவில் 9-10 நூற்றாண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோவில் என்று கூறலாம். முதலாம் பராந்தகர் காலம் முதல் ராஜராஜர் காலம் வரை இருக்கும். இதை பராமரிக்க வழங்கிய நன்கொடை, தங்கம் விவரம் குறித்து கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளன. இதனால் தொல்லியல் துறை பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இந்த கோவிலை கோவிந்தபாடி பெருமானடிகள் கோவிந்தபாடி ஆழ்வார் போன்ற பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. கண்ணனின் சிற்பங்கள் இருப்பதால், கோனார் கோவில் என பேச்சு வழக்காக மாறி இருக்கலாம். இதை பச்சை நிற கோவில் எனக்கூறுவது தவறு. இது, ஒருவிதமான கருங்கல் தான். வள்ளி மலை பகுதியில் இருந்து எடுத்து வந்து கோவிலை கட்டி இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். அதேபோல் ஏழு குதிரை பூட்டிய தங்கத்தேர் மண்ணில் புதைந்து இருப்பதாக கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது.

சிறப்பு அம்சங்கள்

பச்சை நிற கற்களை, பெரும்பாலான கோவில் கட்டுமானங்களில் பயன்படுத்துவதில்லை. தஞ்சை பெரு உடையார் கோவிலில் கூட, தாது மணல் கலந்த கற்கள் தான் என, கூறப்படுகிறது. ஆனால், கோனார் கோவிலில், பச்சை நிற கற்கள் தான், கட்டுமானத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. கோவிலை, சுற்றியுள்ள மேற்புற துாண்களில், யாளி வீரர்களின் சிற்பம் அற்புதமாக உள்ளது. மொத்தத்தில், ஆட்களை வசீகரிக்கும் கோவிலாக கோனார் கோவில் திகழ்கிறது.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

தொல்பொருள் ஆய்வு (ASI) நிறுவனம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமால்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருமால்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top