திருமானூர் கைலாசநாதர் திருக்கோயில், அரியலூர்
முகவரி
திருமானூர் கைலாசநாதர் திருக்கோயில், திருமானூர், அரியலூர் மாவட்டம்- 621715.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி : காமாட்சி
அறிமுகம்
கீழபழுவூர்- திருவையாறு சாலையில் கொள்ளிடத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது இந்த திருமானூர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜனின் பாட்டியான செம்பியன் மாதேவியார் கட்டிய திருக்கோயில். பின்னர் பாண்டியர்கள், முதல் உடையார்பாளையம் ஜமீன் வரை பலரும் திருப்பணிகள் செய்துள்ள கோயில் இது. தியாகவிநோதனஆற்றூர் என வழங்கப்பட்ட இவ்வூர், காலத்தினால் மருவி திருமானூர் என ஆனது. 2.5 ஏக்கர் பரப்பிலான பெரிய கோயில், இரு பிரகாரங்கள் உள்ளன. கிழக்கு தெற்கு என இரு வாயில்கள் இருந்தாலும், தென் புற வாயிலே பெரும்ம்பாலனவர்கள் உபயோகிக்க கூடியதாக இருக்கிறது. அம்பிகை சன்னதியின் நேர் எதிரில் இந்த வாயில் உள்ளது. இறைவன் கைலாசநாதர் இறைவி- காமாட்சி. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை என உள்ளனர். முதல் சுற்று அழகிய சுற்றாலை மண்டபம் கொண்டுள்ளது. மேற்கு திருமாளிகை பத்தியில் விநாயகர், முருகன்- வள்ளி தெய்வானையுடனும், மகாலட்சுமியும் சன்னதி கொண்டுள்ளனர். காசி விஸ்வநாதர், வைத்தியநாதரும் அவரின் எதிரில் ஓர் நந்தியும் அருகில் ஜேஷ்ட்டாதேவியும் உள்ளனர். இரண்டாம் பிரகாரத்தில் பெரிய வில்வமரம் கிழக்கு பகுதியில் உள்ளது. பல சிறப்புக்கள் கொண்ட பெரிய கோயிலாக இருந்தாலும் ஏனோ மக்கள் அதிகம் வந்து செல்வது குறைவாகவே உள்ளது. ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமானூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி