Thursday Sep 19, 2024

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திண்டுக்கல்

முகவரி :

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

திருமலைக்கேணி, செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்,

தமிழ்நாடு 624306

தொலைபேசி: +91-451 – 205 0260, 96268 21366

இறைவன்:

சுப்பிரமணியர்

அறிமுகம்:

திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி முருகன் கோவில் முருகன் கோவில்களில் மிகவும் பழமையானது. இது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமலைக்கேணி நகரில் அமைந்துள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் மிகவும் புனிதமானது, இது மாநிலத்தின் புகழ்பெற்ற மத சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

புராண முக்கியத்துவம் :

 இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். அவ்வேளையில் அவரது கனவில் தோன்றிய முருகன் தீர்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி, மன்னர் இங்கு கோயில் எழுப்பினார்.

நம்பிக்கைகள்:

பொறுப்பான பதவி கிடைக்க, தலைமைப்பண்பு வளர இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தெய்வானை தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வேண்டிக்கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

இரண்டடுக்கு கோயில்: மலையில் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால், முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார், கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால், பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே, அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது.

ராஜ தரிசனம்: மூலஸ்தானத்தில் முருகன், பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து, ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள். இந்த கோலத்தில் முருகனை தரிசித்தால், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கும் என்கிறார்கள். உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், “மலைக்கேணி’ (கேணி – கிணறு) என்று பெயர் பெற்றது.

கீழ் பழநி: குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இக்கோயிலை, “கீழ் பழநி’ என்றும் அழைக்கிறார்கள். கந்த சஷ்டி விழா 7 நாட்கள் நடக்கும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

திருவிழாக்கள்:

      சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி, தை கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமலைக்கேணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டுக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

2 thoughts on “திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திண்டுக்கல்

  1. அருகில் உள்ள விமான நிலையம்: மதுரை

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top