Sunday Jul 07, 2024

திருமஞ்சன வீதி ராஜதுர்க்கை திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோயில், திருமஞ்சன வீதி, திருவாரூர் மாவட்டம் – 610001.

இறைவன்

இறைவி: ராஜதுர்க்கை

அறிமுகம்

துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரிய துர்கை அம்மன் ராஜ துர்கை என்ற திருப்பெயருடன் திருவாரூர் திருமஞ்சன வீதியில் கோயில் கொண்டு அருள் புரிகின்றாள். ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புக்தியோ நடைபெறும்போது, இங்கே வந்து ராஜ துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர். இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, மகம் நட்சத்திரக்காரர்கள்; ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அனைவருக்கும் யோகாதிபதியாக விளங்குகிறாள் இந்த ராஜ துர்க்கை.

புராண முக்கியத்துவம்

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாகவும்; இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்று சக்திகள் ஒருங்கே அமையப் பெற்ற சக்தியாகவும்; வேதம் ஆகமம், புராணம் ஆகியவற்றில் வெற்றி என்ற நாமத்திற்கு பொருளுடையவளாகவும் விளங்குபவள் ஜெய துர்க்கா. இப்படி எங்கும் எதிலும் எந்நிலையிலும் வெற்றியைத் தரக்கூடிய ஜெயதுர்க்கா தேவியானவள், ராஜதுர்க்கை என்ற திருநாமத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள்.

நம்பிக்கைகள்

அனைத்து யோகங்களும் விரைவிலேயே கிடைக்க, தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடை நீங்க இங்குள்ள துர்கையை வழிபட்டுச் செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பொதுவாக ஆலயங்களில், துர்க்கையை வடக்கு பிராகார கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால் இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருளாட்சி புரிகிறாள். சங்கு, சக்கரம், கத்தி, சூலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் ஏந்தி, தலையில் சந்திர கலையை தரித்தவண்ணம் சாந்த சொரூபிணியாகக் காட்சி தரும் ராஜதுர்க்கையின் ஆற்றல் அளவிடற்கரியது. ராமபிரான் இலங்கைக்கு ராவணனை வதம் செய்யப் புறப்படும் முன் இவ்வன்னையை பக்தியோடும், பாசத்தோடும் வழிபட்டுச் சென்று அவனை வெற்றி கொண்டதாக மகாகவி காளிதாசர் எழுதிய ரகுவம்ச காவியத்தின் மூலம் அறிய முடிகிறது.

திருவிழாக்கள்

ஆடிவெள்ளி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top