திருப்போரூர் திருக் காட்டூர் அருள்மிகு வைத்தியலிகேஸ்வரர் கோயில்
இந்த சிவஸ்தலம் சென்னை திருப்போரூர் அருகே 4 கி.மீ.தூரத்தில் காட்டூரில் உள்ளது.
தாம்பரம் 32 கி.மீ.செங்கல்பட்டு 26 கி.மீ. கூடுவாஞ்சேரி 17 கி.மீ.
சென்னை 45 கி.மீ.தூரத்தில் உள்ளது.பேரூந்து வசதி உள்ளது. தனியார்
வாகன வசதியும் உள்ளது.
இறைவர் திருப்பெயர் : ஶ்ரீஉத்திர வைத்தியலிங்கேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஶ்ரீதையல்நாயகி.
தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்
முலவர் உத்ரா வைத்திய லிங்கேஸ்வரரை காசியில் இருந்து மகரிஷிகள் கொண்டு வந்தனர். அவர்கள் இங்கே லிங்கத்தை நிறுவி இங்கேயே தங்கி ஆண்டவரை வணங்கினர்.
தொண்டை மண்டலத்தின் அந்த வனப்பகுதியில், தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், அந்த இடத்தில் சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை அறிந்தார். நித்தியப்படி பூஜைகளுக்காகவும் இந்த வழியே வருவோரின் தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் வேண்டி, சிவனாரைத் தொழுது முறையிட்டார்.அவரின் கோரிக்கையை ஏற்ற சிவனார், அந்தத் திருவிடத்தில் தீர்த்தக் குளத்தை உருவாக்கியதுடன் அப்படி உருவாக்கிய அகத்தியர் தீர்த்தத்திலிருந்து நீர் கொண்டு வந்து என் திருமேனிக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை இவ்வூர் மக்களின் பிணி தீர்க்கும் மருந்தாக கொடு என்று சொல்லி மறைந்தார். திருமணக் கோலத்திலும் அகத்தியருக்கு காட்சி தந்தருளினார். இப்படி, திருக்காட்சி அருளியதாலும் வனமாகத் திகழ்ந்ததாலும் அந்தப் பகுதி காட்டூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். ஈசனார் உத்தரவின்படி அகத்தியர் அபிஷேக நீரை மக்களுக்கு பருக கொடுத்தார். மக்களை வாட்டிய கொடிய பிணி மறைந்து மக்கள் மகிழ்ச்சியால் திளைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை இந்த திருக்காட்டூர் வாழ் கிராமத்து மக்களுக்கு காலரா போன்ற தொற்று நோய்கள் வருவதில்லை. அருகிலுள்ள வட்டார கிராமங்களை பாதிக்கும் நோய் திருக்காட்டூர் கிராம எல்லைக்கு வருவதில்லை!
இத்தலம் முற்றிலும் சிதிலமடைந்திருந்த நிலையில் பக்தர்கள் நன்கொடைகள் வசூலித்து புனருத்தாரணம் செய்துள்ளனர். திருப்பணி நடந்துவந்த நிலையில் பூமிக்கடியில் புதைந்திருந்த அம்பாளின் திருமேனி கிடைக்கப்பெற்றது சிறப்பாகும். பாசம், அங்குசத்துடன் அபயவரத திருக்கரங்களோடு அமையப்பெற்றுள்ளார் இந்த அம்பிகை.
ஐந்து நிலைகளுடன்கூடிய ராஜகோபுரம் இவ்வாலயத்திற்கு கம்பீரத்தை அளிக்கிறது. பிரகாரத்தில் கணபதி, பால முருகன், சண்டேஸ்வரர், அதிகார நந்தி அமைந்துள்ளனர். கருவறையில் சுமார் இரண்டடி உயரத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் அருள்மிகு வைத்தியநாதர். அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். செவ்வாய் பகவான் அவருடைய வாகனமான ஆட்டுக்கிடாவுடன் தனியாக எழுந்தருளியுள்ளது சிறப்பு!
இறைவனின் திருமேனியை பங்குனி உத்திர திருநாளுக்கு மூன்று தினங்கள் முன்பாக காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் சூரியன் தன் பொற்கிரணங்களால் தரிசித்து வணங்கி செல்கிறார். அது சமயம் இறைவன் பிரகாசமான ஒளிப்பிழம்பாக காட்சியளிக்கிறார். சிவன் சுயம்புவாக இங்கு தோன்றியுள்ளார்.
சுமார் 1200 ஆண்டு பழமையான இந்த சிவஸ்தலம்செவ்வாய் பரிகார தலம்
மகப்பேறு அருளும் தலம்.இங்குள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி இறைனை
வணங்கி தீராதநோய் தீரும் என்பது ஐதீகம். அம்பாளை மூன்று வெள்ளிக்
கிழமைகளில் நெய் தீபமேற்றி வழிபட்டால் கருவுற்ற பெண்களுக்கு சு கப்
பிரசவம் உண்டாகும்.
முனிவர்கள், புனிதர்கள் மற்றும் மத மக்கள் இந்த இடத்தில் தங்கியிருந்ததால், இந்த இடம் மரைகட்டூர் (மராய் என்றால் வேதம்) என்று அழைக்கப்பட்டது.
பிருஹு, க ut தமா, காஷ்யப, ஆத்ரி போன்ற முனிவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கினர்.
சிவன் துதி
மந்திரம் நான்மறை ஆகி
வானவர் சிந்தையுள்
அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை
வேதியர்க்கு அந்தியுள் மந்திரம்
அஞ்ச எழுத்துமே
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவிள்க்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழி திறந்து ஏத்துவார்ரக்கு இடர்
ஆனகெடுப்பன அஞ்சு எழுத்துமே
ஓம் நமோ நமசிவாய
ஓம் திருச்சிற்றம்பலம்
ஓம் ஶ்ரீதையல்நாயகி சமேத ஶ்ரீ உத்திர வைத்திய
லிங்கேஸ்வரர் போற்றி போற்றி.