திருப்புளியங்குடி பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில், தூத்துக்குடி
முகவரி
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி – 628 621 தூத்துக்குடி மாவட்டம் போன்: +91 4630 256 476
இறைவன்
இறைவன்: பூமிபாலகர் இறைவி: மலர் மகள் நாச்சியார்
அறிமுகம்
திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார். இறைவியின் பெயர் மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி; தீர்த்தம் இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம் ஆகியன. விமானம்: வேதசார விமானம் வகையைச் சேர்ந்தது.நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட தலம் இதுவாகும்.[2] இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களால் பாடல் பெற்றுள்ளது இத்தலத்திலுள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். வேறு கோயில்களில் காணவியலாத காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியகாட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் வடக்குப்புற சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு சன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும். தீர்த்தம்:வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம் புராண பெயர்:திருப்புளிங்குடி
புராண முக்கியத்துவம்
இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாமரைக்கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பாத தரிசனம் செய்ய வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இந்திரனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம். வருணன் நிருதி தர்மராஜன் நரர் ஆகியயோருக்கு காட்சி கொடுத்ததலம்.
நம்பிக்கைகள்
அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்
சிறப்பு அம்சங்கள்
இத்தலத்தில் பூமிபாலகர் பெருமாள் வேதசார விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டலமாக (மரக்காலைத் தலையின் அடியில் வைத்துசயனத்தில் உள்ளார்) அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 83 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 4 வது திருப்பதி(திருப்புளியங்குடி). நவகிரகங்களில் இது புதன் தலம்
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்புளியங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தூத்துக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி