Saturday Jan 18, 2025

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் , திருப்பழனம் அஞ்சல். திருவையாறு 613 204 . தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 4362 326 668

இறைவன்

இறைவன்: ஆபத்சகாயர் இறைவி: பெரிய நாயகி

அறிமுகம்

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவையாறுக்குக் கிழக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது.

புராண முக்கியத்துவம்

அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம் என்று பெயர். ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை எமதருமன் துரத்திக் கொண்டு வரும்போது அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்தபோது இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆபத்சகாயேசுரர் என்று பெயர். பழமையான ராஜகோபுரம் – மூன்று நிலைகளையுடையது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

நம்பிக்கைகள்

திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம். குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம். இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

திருவிழாக்கள்

ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவையாறு

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top