Friday Jan 17, 2025

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்பானை நைவேத்தியம் ஏன் தெரியுமா…. தெரிந்து கொள்வோம் வாருங்கள்…….

சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை இன்னும் சிறப்புடையதாக உள்ளது.புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதியை திருப்பதி சென்று முறைப்படி வழிபாடு செய்து அருள் பெற்றவர் நாரத மகரிஷி, தான் பெற்ற பலனை ஒரு ஏழைக் குயவனுக்கு அடைய வழிகாட்டினார்.திருமலை அடிவாரத்தில் ஒரு ஏழைக்குயவன் வாழ்ந்து வந்தான். பீமன் என்ற அவன் உடல் ஊனமுற்றவன். அவன் தினமும் மண்பாண்டங்களைச் செய்துவிற்று பிழைப்பு நடத்தி வந்தான். மண்ணினால் மலர்களைச் செய்து அம்மலர்களால் ஸ்ரீவேங்கடேஸ்வரப் பெருமானை அர்ச்சனை செய்து வந்தான்.ஒருநாள் அவனது கனவில் நாரத மகரிஷி தோன்றினார். புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வெங்கடாஜலபதியை வழிபடும் முறையை உபதேசித்தார். மலை மீது ஏற முடியாத பீமய்யா தனது குடிசையிலேயே வழிபாடு நடத்த முடிவு செய்தான்.மண்ணால் வெங்கடா ஜலபதியின் உருவத்தை செய்தான். மண்ணாலே மலர்கள் செய்து புரட்டாசி சனிக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபாடு செய்தான். முறைப்படி விரதத்தைக் கடைப்பிடித்தான். அதே சமயத்தில் நாட்டை ஆண்ட அரசர் தொண்டமான் சக்கரவர்த்தி தங்க மலர்களால் சீனிவாசனைப் பூஜை செய்து வந்தான். ஒருநாள் பொன்னாலான மலர்களால் அர்ச்சனை செய்தபோது அவை மண் மலர்களாகி விழுவதைப் பார்த்தான் அதிர்ச்சி அடைந்து பயந்து கண் கலங்கினான்.ஒருநாள் நள்ளிரவில் ஏழுமலையான் அரசனின் கனவில் வந்து அரசே! அருகில் வசிக்கும் பீமன் என்ற குயவன் என்னைத் தினமும் பக்தியுடன் மண் மலர்களால் பூஜை செய்கிறான். ஆகையால் நீ பூஜைக்குப் பயன்படுத்தும் பொன்மலர்கள் மண் மலர்களாக மாறி விடுகின்றன என்று கூறி மறைந்தார்.மறுநாள் காலை இந்த உண்மையை அறியத் தொண்டமான் புறப்பட்டு சென்றான். ஒரு குடிசையில் மண்ணினால் செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடாஜலபதியின் சிலைக்கு எதிரில் மெய்மறந்த நிலையில் மண் பூக்களால் அர்ச்சனை செய்யும் பீமனை கண்டான். குயவனுக்கு அரசன் உதவி செய்தான். சில காலம் கழிந்த பின்னர் பீமன், புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்ததன் காரணமாக மோட்ச உலகை அடைந்தான்.தொண்டமான் இவ்வரலாற்றை அர்ச்சகர்களுக்குச் சொல்லி சீனிவாசனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண் பாண்டங்களிலேயே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த பழக்கம் இன்று வரை கோவிலில் நடைபெற்று வருகிறது.

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top