Saturday Jan 18, 2025

திருநெல்லிக்காவல் நெல்லிவன நாதேஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா- 610 205. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369-237 507, 237 438.

இறைவன்

இறைவன்: நெல்லிவனநாதர், இறைவி: அம்லகேஸ்வரி

அறிமுகம்

திருநெல்லிக்கா நெல்லிவனேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 117ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில்அமைந்துள்ளது. இத்தலத்தில் துர்வாசரின் கோபத்தை இறைவன் நீக்கியருளினார் என்பது தொன்நம்பிக்கை. உத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம்.

புராண முக்கியத்துவம்

மூலவர் நெல்லிவனநாதர். அம்மன் மங்களநாயகி. தேவ லோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண் டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. ஒரு முறை துர்வாசரை மதிக்காததால், அவர் “” நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள், ”என சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத்தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்த பின் தேவலோகத்திற்கு சென்றன. அவற்றின் வழியாக வந்த நெல்லி மரங்கள் காலங்காலமாக இறைவனுக்கு நிழல் தந்து தொண்டு செய்யும் பாக்கியத்தை பெற்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் “நெல்லிவனநாதர்’ என அழைக்கப்படுகிறார். இறைவன் தங்கிய தலமும் “திருநெல்லிக்கா’ என அழைக்கப்பட்டது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கோபம் குறையவும், குஷ்டரோகம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்புலிங்கம் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஓரு வார காலத்திற்கு மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 181 வது தேவாரத்தலம் ஆகும். கோயில் தோன்றிய விதம்: திருவாரூரில் வாழ்ந்த சிவபக்தர் ஒருவர் இத்தலம் வந்து இறைவனை தரிசித்தார். அப்போது அங்கு கொடிய மிருகங்கள் அனைத்தும் ஒற்றுமையாய் இருப்பதையும், தேவகணங்கள் நாள்தோறும் வந்து இறைவனை தரிசித்து விட்டு பொழுது விடிவதற்கு முன் சென்று விடுவதையும் பார்த்து சோழ மன்னனிடம் தெரிவித்தார். சோழ மன்னன் மகிழ்ச்சியடைந்து அந்த தலத்தை பார்த்து, அங்கிருந்த காடுகளை அழித்து, நகரமாக்கி பெரிய கோயிலைக் கட்டினான். “ஆமலா’ என்பது சமஸ்கிருதத்தில் நெல்லியை குறிக்கும். எனவேதான் இங்குள்ள இறை வனுக்கு ஆமலகேசன் என்ற திருநாமம் உண்டு. ஈசனுக்கு இங்கு கோயிலைக் கட்டியதால் சோழமன்னனும் பிற்காலத்தில் ஆமலகேச சோழன் என அழைக்கப்பட்டான். மணமாலை சூடிய மங்களத்து நாயகி: ஆமலகேச சோழனின் மகன் உத்தம சோழன். இவனது மனைவி பதும மாலை. இவர்களுக்கு நெடுங் காலமாக புத்திர பாக்கியம் இல்லை. இருவரும் இத்தலம் வந்து இறை வனிடம் வேண்டினார்கள். அப்போது அன்னை பராதியே மூன்று வயது பெண்ணாக வடிவம் கொண்டு மன்னனின் மடியில் வந்து அமர்ந்தாள். அப்போது வானில் ஒரு அசரீ தோன்றி, அம்பாளே குழந்தை வடிவில் வந்துள்ளதாகவும், அவளை “மங்களநாயகி’ என பெயரிட்டு வளர்த்து வரும்படியும் கூறியது. மன்னன் அக்குழந்தையை வளர்த்து வந்தான். உத்தம சோழனின் மறைவுக்கு பின் தாயார் வளர்ப்பில் மங்களநாயகி பருவப்பெண்ணாக வளர்ந்தாள். ஒரு சமயம் மங்களநாயகி திருவாரூர் கோயிலில் தரிசனம் செய்து கொண் டிருந்த போது, “” வரும் ஆவணித் திங்கள் முதலாம் வெள்ளியில் திருநெல் லிக்கா வந்து உன்னை திருமணம் செய்வோம்,” என்று இறைவனின் திருவாய் மொழி கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தாள். ஆவணி முதல் வெள்ளியில் தேவர்கள் சூழ, வேதமந்திரங்கள் ஒலிக்க, மங்களநாய கிக்கு மாலை சூடி மாங்கல்யம் அணிவித்து திருமணம் செய்து கொண்டார். மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஓரு வார காலத்திற்கு மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும். பிறத்தல், தரிசித்தல், நினைத்தல், இறத்தல் முதலியவைகளால் வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் புண்ணிய பயன்கள் அனைத்தும் இந்த ஒரே தலத்தில் கிடைத்து விடும்.

திருவிழாக்கள்

சித்திரையில் முதல் பெருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுகின்றது. தவிர, ஆவணி முதல் வெள்ளிக்கிழமையில் அம்பாள் கல்யாண உற்சவம், நவராத்திரி , சஷ்டி, தைப்பூசம், தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் திருவிளக்கு வழிபாடு முதலிய உற்சவ விசேஷங்களும் நடைபெறுகின்றன.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநெல்லிக்காவல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்லிக்காவல்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top