திருநெய்ப்பேர் வன்மீகநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
திருநெய்ப்பேர் வன்மீகநாதர் சிவன்கோயில்,
திருநெய்ப்பேர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610103.
இறைவன்:
வன்மீகநாதர்
இறைவி:
உமா பரமேஸ்வரி
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 15-கி.மீ. தொலைவு. சென்றால் இத்தலத்தையடையலாம். நமிநந்தியடிகள் நாயனார் வாழ்ந்த இல்லம் அவரது திருக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இது சாலையின் கிழக்கில் உள்ளது கோயில் மேற்கில் உள்ளது. கிழக்கு நோக்கிய சிவன் கோயில் முகப்பில் கோபுரம் ஏதுமில்லை. வாயிலின் மேல் சுதை வேலைப்பாடுகளில் இறைவன் இறைவி விநாயகர் முருகன் உள்ளனர். இறைவன் பெயர்: வன்மீகநாதர் இறைவி பெயர்: உமா பரமேஸ்வரி. சில வருடங்களின் முன்னர் தான் குடமுழுக்கு கண்டுள்ளது. நுழைவாயிலில் நுழைந்த உடன் இடப்பக்கம் நமிநந்தி அடிகள் ஒரு மாடத்தில் உள்ளார். வலப்புறம் சதுர வடிவில் லிங்கமூர்த்தி உள்ளார், எதிரில் நந்தி உள்ளது. அருகில் நமிநந்தி கையில் குடுவையுடன் இருப்பது போன்ற ஒரு சிலை உள்ளது.
இறைவன் கருவறை அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது, அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது. இறைவன் முன்னால் மண்டபம் தாண்டி தனி மண்டபத்தில் நந்தி உள்ளார். சுவாமி உயரமான பாணம் கொண்டுள்ளார். இறைவன் கருவறை முகப்பில் விநாயகர் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் மற்றும் துர்க்கை மட்டும் உள்ளனர். விநாயகர் ஒரு சிற்றாலயத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகன் ஒரு சிற்றாலயத்திலும் உள்ளனர். வடகிழக்கில் வாயு லிங்கம் என ஒரு லிங்கமும், அருகில் நின்ற கோலத்தில் மகாவிஷ்ணுவும், அடுத்து பைரவரும் சனி பகவானும், நாகரும் உள்ளனர். காலை மாலை பூஜைகளும் மாதாந்திர விசேஷ நாட்களும் முறையாக நடைபெறுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருநெய்ப்பேர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி