திருநெய்பேர் நமிநந்தியடிகள் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
திருநெய்பேர் நமிநந்தியடிகள் திருக்கோயில்
திருநெய்பேர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610106.
இறைவன்:
நமிநந்தியடிகள்
அறிமுகம்:
நமிநந்தியடிகள் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார், இவர் திருவாரூர் அருகில் உள்ள திருநெய்பேர் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானைப் வணங்கி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபட்டு பின் கோயில் தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தம்மூருக்குச் சென்று எண்ணெய் கொணர இயலாது என்பதால் திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினார். அவர் சென்ற வீடு சமணர் வீடு. அங்குள்ள சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பீராயின் நீரை அள்ளி எரிப்பீராக’ என்றனர். அது கேட்டுப் மனம் பொறாத நமிநந்தியடிகள் அரனேயன்றிப் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினார்.
அப்பொழுது ‘நமிநந்தியே! உனது கவலை ஒழிக. இதன் அருகிலேயுள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு அருள்மொழி ஆகாயத்தில் தோன்றியது. அதுகேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், இறைவனருளே இதுவாம் என்றெண்ணிக் குளத்தில் சென்று திருவைந்தெழுத்தை ஓதி, நீரை எடுத்துக்கொண்டு வந்து கோயிலையடைந்தார். அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர்விட்டொளிர்வது கண்டு கோயில் முழுவதும் திருவிளக்கேற்றினார். திருவிளக்குகள் பல விடியுமளவும் எரிதற்கு நீரால் நிறைத்தார். இவ்வாறு உலகத்தார் வியக்கும் வண்ணம் பணி செய்தமையால் நாயன்மாராக போற்றப்பெற்றார். சோழ மன்னன் ஆரூப்பெருமானுக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான்.
இப்படி பெருமை பெற்ற நமிநந்தியின் இல்லம் திருநெய்பேர் பிரதான சாலையில் உள்ளது. இந்த இல்லத்தை இப்போது சிறிய கோயிலாக உருவாக்கி வைத்துள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருநெய்பேர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி