திருத்தெங்கூர் திருமேனியழகர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
திருத்தெங்கூர் திருமேனியழகர் திருக்கோயில்,
திருத்தெங்கூர், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்:
திருமேனியழகர்
இறைவி:
திரிபுரசுந்தரி
அறிமுகம்:
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் நாற்சந்தி நிறுத்தம் (தமிழில் நாலுரோடு ஸ்டாப்பிங்) வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் நான்கு கிமீ தூரம் செல்லவேண்டும். தென்னை மரச்சோலையாக இருந்ததால் இவ்வூர் தெங்கூர் எனப்பட்டது. தற்போது திருத்தங்கூர் ஆகியுள்ளது. இவ்வூரில் பாடல் பெற்ற தலம் ஒன்றும் தென் கிழக்கில் உள்ள இந்த சிவாலயம் சேர்த்து இரு சிவாலயங்கள் உள்ளன. நெல்லிக்காவில் இருந்து திருதெங்கூர் உள்ளே நுழையும் இடத்தில் பெயர் பலகை உள்ளது அதனை ஒட்டி செல்லும் மண் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் செல்லலாம், பிறர் திருதெங்கூர் ஊருக்குள் சென்று அதன் தென்புறம் உள்ள இக்கோயிலுக்கு செல்லலாம். மேற்கு நோக்கிய சிறிய ஒற்றை கருவறை கோயில் தான் இந்த திருமேனியழகர் கோயில். பெரிய லிங்க திருமேனியராக இறைவனை இங்கு காணலாம். எதிரில் ஒரு நந்தி உள்ளார். கருவறைக்கு உள்ளேயே அம்பிகையின் திருமேனி உள்ளது போலும். அதனை காண இயலவில்லை. இறைவன்- திருமேனியழகர் இறைவி திரிபுரசுந்தரி கருவறையை சுற்றி சிறிய மதில் சுவர் கட்டி பிரகாரமாக வலம் வர வழி வைத்துள்ளனர். கருவறை கோட்டங்கள் இல்லை. சண்டேசரும் இல்லை.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாலுரோடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி