Monday Jan 27, 2025

திருக்கடித்தானம் அம்ருத நாராயணப்பெருமாள் திருக்கோயில், கேரளா

முகவரி

அருள்மிகு அம்ருத நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கடித்தானம், செங்கணாச்சேரிவழி, கோட்டயம்மாவட்டம், கேரளா – 686 101.

இறைவன்

இறைவன்: அத்புதநாராயணன் (அம்ருதநாராயணன்) இறைவி: கர்பகவள்ளி

அறிமுகம்

திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், திருக்கடித்தானம் ஆகியன. கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் வீடுபேறும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.இத்தலத்தின் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அற்புத நாராயணன் பெயருடன் விளங்குகிறார்.இறைவியின் பெயர் கற்பகவல்லி என்பதாகும் இதலத் தீர்த்தம் பூமி தீர்த்தம். இதன் விமானம் புண்யகோடி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. நரசிம்மன் சன்னதியும், கிருஷ்ணர் சன்னதியும் இருக்கின்றன. ருக்மாங்கதன் என்பவன் சூரிய தேசத்து அரசன். இங்குள்ள பெருமாள் கோவிலில் பெரும்பாலும் பக்தியோடு பொழுதைக் கழித்தான். ஏகாதசி தோறும் விரதம் இருந்தான். இதனால் ருக்மாங்கதனுக்கு தெய்வ யோகம் கிடைத்தது. ருக்மாங்கதனைப் போலவே மற்றவர்களும் ஏகாதேசி விரதமிருந்து இங்குள்ள பெருமாளை பிரார்த்தனை செய்தால் அவர்கள் அனைவருக்கும் தேவலோக பதவி கிடைக்கும் என்கிறது கோயில் வரலாறு. இந்த சன்னதியை பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் பிரதிஷ்டை செய்தார். நம்மாழ்வார் இந்தக் கோயிலைப் பற்றி மங்களாசாசனம் செய்திருக்கிறார். தீர்த்தம்: பூமி தீர்த்தம்

புராண முக்கியத்துவம்

அவனிடமிருந்து தப்பிக்கும் நோக்குடன், தாங்கள் விஷ்ணு பகவான் பூஜைக்காகத்தான் பூக்களை கொய்வதாக பொய் உரைத்தனர். நாராயணனின் சேவை பொருட்டு பூக்கள் கொய்யப்பட்டதென்றதும் அவர்களை ஒன்றும் செய்யாமல் விடுவித்து விட்டான் அரசன். ஆனாலும் கடவுள் மீது பொய் சொன்ன காரணத்தால் அம்மாதர்கள் மேலோகம் செல்லும் சக்தியை இழந்து விட்டு திண்டாடினார்கள். கடைசியில் அவர்கள் ருக்மாங்கதனின் காலில் விழுந்து தங்கள் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிக்கும்படி வேண்டினார்கள். பரிவு கொண்ட அரசன், தான் ஈட்டிய ஏகாதசி விரத பலனில் ஒருபங்கை அவர்களுக்கு தாரைவார்க்க, அவர்கள் இழந்த சக்தியை மீளவும் பெற்று சொர்க்கலோகம் அடைந்தார்களாம். இவ்வரசனின் தர்மநிஷ்டைக்கும், நியாய பரிபாலனத்திற்கும், நாராயண பக்திக்கும் மெச்சிய பெருமாள் அவருக்கு இவ்விடத்தில் காட்சி தந்து நின்றதாக புராணக்கதை.

நம்பிக்கைகள்

வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறவர்கள், பதவி கிடைக்காமல் அலைகிறவர்கள், வெகுநாட்களாக பாடுபடும் பதவியில் முன்னேற்றம் பெறாமல் துடிக்கிறார்கள், புண்ணியம் நிறைய செய்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆகியோர் அனைவரும் திருக்கடித்தானம் அற்புத நாராயணனின் கோயிலுக்குள் காலடி வைத்தால் போதும். கவலை எல்லாம் விலகும். நினைத்த காரியத்தை உடனே முடித்துவிடும் பாக்கியம் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள். இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் அமைந்துள்ளன.பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே இந்தத் தலம் சகாதேவன் கட்டிய தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் மதில் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வட்டெழுத்தில் உள்ளது. நம் தமிழ்மொழி வட்டெழுத்து நிலையில் இருந்த காலத்திலேயே இத்தலம் இருந்ததென்று அறியலாம். நினைத்த மாத்திரத்தில் முக்தி தரத்தக்க திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில் இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண சேத்திரங்களில் மூன்று ஷேத்திரங்கள் உடனடியாக முக்தியளிக்க வல்லதென்றும் அதில் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களில் இத்தலம் பாடல்பெற்றுள்ளது.

திருவிழாக்கள்

கார்த்திகை தீபம், ஏகாதசி விரதத்திலிருந்து இங்குள்ள திருவிழாவிற்கு பிரார்த்தனை செய்யுங்கள்

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கடித்தானம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கணூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top