தாராசுரம் ஆவுடையநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
தாராசுரம் ஆவுடையநாதர் சிவன்கோயில் வாணிநகர், தாராசுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 702
இறைவன்
இறைவன்: ஆவுடையநாதர் இறைவி : மீனாட்சி
அறிமுகம்
இக்கோயில் சிவன், காமாட்சி இரண்டும் ஒன்றாக உள்ள கோயில் தான் ஆனாலும் காமாட்சியம்மன் கோயில் என்று சொன்னால்தான் தெரியும். கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் இருக்கும் தாராசுரத்தில் உள்ள கம்மாளர் தெருவில் அமைந்துள்ளது. ஆனால் இக்கோயில் காமாட்சி அம்மன் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்கில் உள்ள கம்மாளர் தெருவில் வடக்கு நோக்கிய கருவறையில் காமாட்சி அம்மன் உள்ளார். வெளிப்புறம் இருந்து பார்க்கும்போது அது சிவன் கோயில் என்பதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. காமாட்சியம்மன் கருவறையின் எதிரே பலிபீடம், நந்தியைக் காணமுடிந்தது. கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறை திருச்சுற்றில் வேறு தெய்வங்கள் இல்லை.. கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் இக்கோயில் மூன்றாம் இடம் பெறுகிறது. காமாட்சி அம்மன் சன்னதியின் இடப்புறமாக கிழக்கு நோக்கி ஒரு தனிகோயிலாக அதே வளாகத்தில் சிவன் கோயில் உள்ளது. வாயிலின் இரு புறமும் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகன் உள்ளார். வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், மற்றும் பெரிய நந்தி. கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் பெரிய சதுர லிங்கத்திருமேனியாக ஆவுடையநாதரை காணலாம். இறைவனை ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கின்றனர். இறைவனுக்கு இடப்பாகம் கொண்டு மீனாட்சி அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் சன்னதியில் உள்ளதைப் போலவே அம்மன் சன்னதியின் எதிர் புறம் பலிபீடம் உள்ளது. பிரகார வலம் வந்தால் கருவறை கோஷ்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இறைவன் இறைவி சன்னதிகள் உள்ள முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. இங்கு அபூர்வமாக தெற்கு நோக்கிய தக்ஷணலிங்கமாக இறைவன் உள்ளார். அருகில் வடகிழக்கு மூலையில் பைரவர், விநாயகர், நாகம் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் பழுதடைந்துள்ளது. திருப்பணிகள் நான்கு ஆண்டுகள் முன்னம் துவங்கப்பட்டு பணிகள் நின்று போயுள்ளது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாராசுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி