Saturday Jan 18, 2025

தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்

முகவரி

அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில், தான்தோன்றிமலை – 639005, கரூர் மாவட்டம். போன்: +91-4324 2355531, 2365309

இறைவன்

இறைவன்: கல்யாணவெங்கட்ரமணர் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்

கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், கரூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் கல்யாண வெங்கடரமண சுவாமி சன்னதியும், அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு கருடாழ்வார். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிருவகிக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி யாத்திரை மேற்கொண்டான். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர். அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம் மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது.இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அருளையும் தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார்.தவிர ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலை என்றும் கூறப்படுகிறது.

நம்பிக்கைகள்

உடம்பின் மீதுள்ள மரு ஏற்பட்டால் நிவர்த்தி செய்ய உப்பு மிளகு வெல்லம் போட்டு பெருமாளை பிரார்த்தனை செய்தல் வேண்டும். தவிர குழந்தை பாக்கியம், கல்யாண பாக்கியம் ஆகியவை நிறைவேறுகிறது. உடம்பு சம்பந்தமான எந்த வியாதியானலும் பெருமாளை பிரார்த்தனை செய்தால் குணம் அடைகிறது.

சிறப்பு அம்சங்கள்

இது ஒரு குடவரைக்கோயில். செம்மாலி சமர்ப்பணம் : செருப்பு தைக்கும் சக்கிலியர் என்ற இனத்து பெரியவர்கள் கனவில் பெருமாள் வந்து தனது வலது காலுக்கோ அல்லது இடது காலுக்கோ அல்லது இரண்டு கால்களுக்குமோ அளவு சொல்லி அதேபோல் செய்து கொண்டு வரச் சொல்கிறார். அந்த இனத்து மக்கள் பெருமாளுக்கு மனதுக்கு பிடித்த அவர் சென்ன அளவுள்ள செருப்புகளை தயாரித்து கொண்டு கோமாளி வேசம் போட்டு கொண்டு வந்து பெருமாளுக்கு படைப்பர். இது இக்கோயிலில் விசேசமான ஒன்று. இதற்கு செம்மாலி சமர்ப்பணம் என்று பெயர். குடவரைக் கோயில் என்பது சிறப்பு. 300 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில். சுவாமி அருபி(ரூபம் கிடையாது) தென் திருப்பதி என்ற பெயர் பெற்றது. மார்பில் வட்டிஸ்தலத்தில் லட்சுமி (தாயார்) உள்ளார். திருப்பதியில் இருப்பது போல இங்கும் தனியாக தாயார் சன்னதி இல்லை.

திருவிழாக்கள்

புரட்டாசி உற்சவம் – 22 நாட்கள் – 1 லட்சம் பக்தர்கள் கூடுவர் மாசி மகத்தேர் – 17 நாட்கள் – 50 ஆயிரம்பேர் கூடுவர் கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top