தளவானூர் சத்ருமல்லேஸ்வரர் குடைவரைக் கோயில், செஞ்சி
முகவரி
தளவானூர் சத்ருமல்லேஸ்வரர் குடைவரைக் கோயில், தளவானூர், விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலை, செஞ்சி மாவட்டம் – 604 202.
இறைவன்
இறைவன்: சத்ருமல்லேஸ்வரர்
அறிமுகம்
விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் கிராமப்புறச் சாலையில் 6கி.மீ. பயணித்து தளவானூர் சிற்றூரை அடையலாம். தளவானூர் குடைவரைக் கோயில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவ மன்னனால் (கிபி 600 – 630) குடைவிக்கப்பட்டது. தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர் மலையில் குடைவரைக் கோவில் இருக்கின்றது. இக்குடைவரைக் கோயில் ‘சத்ருமல்லேஸ்வரம்’ எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது. கருவறையில் இலிங்கம் காணப்படுகின்றது. இக்குடைவரையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று வடமொழிக் கல்வெட்டு, மற்றது தமிழ்க் கல்வெட்டு. பாதபந்த தாங்குதளம் பெற்ற ஒரே குடைவரை. இதனை கட்டுமானக் கோயில் தாங்குதள அமைப்பிற்கு முன்னோடி எனலாம். தமிழ்நாட்டிலுள்ள குடைவரைகளில் மகரத்தோரண முகப்புப் பெற்ற ஒரே குடைவரை. முழுமை பெற்ற முதல் முகப்புக் கபோதம் பெற்ற குடைவரை. முதல் பூமிதேசம் அமைப்பினை கொண்ட குடைவரை. முன்றில் படிப் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் குடைவரை. சத்ருமல்லேசுவர் குடைவரை என்பது தளவானூர் சிறப்பாகும்.
காலம்
கிபி 600 – 630 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தளவனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பேரணி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி