தண்டந்தோட்டம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
தண்டந்தோட்டம் அகத்தீஸ்வரர் திருக்கோயில்,
தண்டந்தோட்டம், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612202
இறைவன்:
அகத்தீஸ்வரர்
அறிமுகம்:
திருத்தாண்டவதோட்டம் என அழைக்கப்பட்ட இத்தலம் தற்போது தண்டந்தோட்டம் என கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் பத்து கிமீ தூரத்தில் உள்ளது, அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஊர் இது, இங்கு இரு சிவன் கோயில்களும், ஒரு பெருமாள் கோயிலும் இரு விநாயகர் கோயில்களும் உள்ளன. இவ்வூர் 1200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. கிழக்கு மேற்கில் உள்ள முதல் தெருவின் கிழக்கு மூலையில் நடனபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது அதனைஒட்டி தென்புறம் திரும்பும் தெருவில் உள்ளது இந்த அகத்தீஸ்வரர் கோயில். மேற்கு நோக்கிய இறைவன் கருவறையும் தெற்கு நோக்கிய அம்பிகை அபிராமியின் கருவறையும் உள்ளன. இறைவன் சன்னதி முன்னர் ஒரு சிறிய நந்தி வெளியில் உள்ளது வேறு சன்னதிகள் ஏதுமில்லை. வெளியில் ஒரு சின்ன நந்தி பலிபீடம் நாகர் ஆகியவை கிடக்கின்றன. அகத்தியருக்கு இறைவன் காட்சி தந்த போது, ‘இந்தத் தலத்துக்கு வரும் அன்பர்களுக்கு திருமணத் தடை முதலான சகல தடைகளும் நீங்கப் பெற்று, சுபிட்சமாக வாழவேண்டும். அதேபோல், இங்கு வந்து வழிபட்டால், திருக்கயிலாயத்துக்கு வந்து தங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்க வேண்டும்’ என வரம் கேட்கிறார், அதனால் இத்தலம் கயிலைக்கு இணையான தலம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தண்டந்தோட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி