டி. வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
முகவரி :
அருள்மிகு திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்,
டி. வைரவன்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630210.
இறைவன்:
திருமெய்ஞானபுரீஸ்வரர்
இறைவி:
பாகம்பிரியாள்
அறிமுகம்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைரவன்பட்டியில் மெய்ஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. மூலவர் திருமெய்ஞான சுவாமி லிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மாள் பாகம்பிரியாள். பெரிய பிரகாரம் நந்தி மண்டபம் உள்பிரகாரம் மகாமண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என முழுவதும் கற்றளியில் அமைந்துள்ளன. சிறப்பு மூர்த்தியாக தெற்கு நோக்கிய பைரவர் உள்ளார். இத்தலத்தில் மெய்ஞானபுரீஸ்வரர் மூலவராக இருந்தாலும் பைரவரே பிரதான மூர்த்தியாக இருக்கிறார்.
புராண முக்கியத்துவம் :
காபாலிக சைவம் நிலை கொண்ட காலம். இப்பகுதி அஷ்டபைரவர்களால் சன்னிதிகளை கொண்டு பிரசித்தி பெற்று விளங்கியது. வைரவன்பட்டி, வளரொளிநாதர் திருக்கோயில் யோக பைரவர், வைரவன்பட்டி வளரொளிநாதர் திருக்கோயில் பைரவர் சன்னிதி, ஒழுக மங்கலம் பைரவர், பெரிச்சிக்கோயில் ஆண்டப்பிள்ளை நாயனார் திருக்கோயில் பைரவர். பெரிச்சிக்கோயில் ஆண்டப்பிள்ளை நாயனார் திருக்கோயில் பைரவர். அழகாபுரி அருள்மிகு அழகு முனீஸ்வரர் திருக்கோயில் பைரவர் ஆகியன. முதலாம் இராஜராஜ சோழன் கி.பி.985-1014ல் அரசு புரிந்த மாமன்னர் வழிபட்டது. பிரபாகரன் என்ற நூலை போதிக்கும் அந்தணர்களுக்கு அறக்கொடை நல்கியது. மாறவர்மன் குலசேகர பாண்டியன், சுந்தரபாண்டியன், விஜய நகர அரசர்கள் புஜபலதேவன், அச்சுத தேவராயன், மதுரை விசுவநாத நாயக்கர், தஞ்சை ரகுநாத நாயக்கர் ஆகியோர் கால கல்வெட்டுகளும் தானசாசனங்களும் இங்குள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கைகள்:
இங்கு முக்கிய பிரார்த்தனையாக சகல பேறுகளையும் வழங்கி வரும் கோயில் என்பதால் மக்கள் பிரார்த்திக்கின்றன.
சிறப்பு அம்சங்கள்:
இங்குள்ள மூலவர் திருமெய்ஞ்ஞான சுவாமி லிங்கத்திருமேனி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சாளாகாரம், பெரிய பிரகாரம் நந்தி மண்டபம், உள்பிரகாரம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் கருவறை கற்றளி அமைந்துள்ளன. சிறப்பு மூர்த்தியாக தெற்கு நோக்கிய பைரவர் உள்ளார். சிறந்த சிவன்கோயிலாகவும், வழிபடுவோர்க்கு சகல பேறுகளையும் வழங்கி வருகிறது.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
டி.வைரவன்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை