ஜோஹர் பஹ்ரு ஸ்ரீ இராஜா காளியம்மன் கோவில், மலேசியா
முகவரி
ஜோஹர் பஹ்ரு ஸ்ரீ இராஜா காளியம்மன் கோவில், ஜலான் தெப்ரு துன் அப்துல் ரசாக் 1/1, வாடி ஹனா, 80300 ஜோஹர் பஹ்ரு, ஜோஹர், மலேசியா
இறைவன்
இறைவன்: சிவன் இறைவி: இராஜாகாளியம்மன்
அறிமுகம்
மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு மாநிலம், ஜலான் தெப்ரு என்ற இடத்தில் உள்ளது, ஸ்ரீ இராஜா காளியம்மன் கோவில். மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் என்ற பெருமை இக்கோவிலுக்குக் கிடைத்துள்ளது. 1922 இல் கட்டப்பட்டது, இது ஜோஹர் பஹ்ருவில் அமைந்துள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும். கோவில் இருக்கும் நிலம் இந்தியர்களுக்கு ஜோஹர் சுல்தானால் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் அது குடிசை போல இருந்தது ஆனால் பல ஆண்டுகளக்குப் பின்னர் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. இந்த கோவிலின் தனித்துவமான அம்சம் அதன் ஆக்கப்பூர்வமான, நேர்த்தியான கண்ணாடி வேலை. 3, 00,000 க்கும் மேற்பட்ட ருத்ராக்ஷ மணிகள் சுவரில் ஒட்டப்பட்டுள்ளன.
புராண முக்கியத்துவம்
மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஜோஹர் பஹ்ரு. அதன் பழமையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீ இராஜகாளியம்மன் இந்து கோவில் 1922 இல் நிறுவப்பட்டது .. ஸ்ரீ சின்னத்தம்பி சிவசாமி தனது தந்தையிடமிருந்து கோவிலைப் பெற்றார் மற்றும் துக்-டக்கில் சவாரி செய்யும் போது அவர் கண்ட கண்ணாடி கலைப்படைப்பின் பிரகாசத்தால் அவர் கண்ணாடிக் கோவிலை கட்ட நினைத்தார். முழு கோயிலும் 300,000 பல வண்ண கண்ணாடி துண்டுகளால் கட்டப்பட்டுள்ளது. நூறாயிரக்கணக்கான கண்ணாடி மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் கெளதம புத்தர் மற்றும் அன்னை தெரசாவின் சிலைகள் உள்ளன. இந்த கோவில் 1922 இல் நிறுவப்பட்டது மற்றும் ஜோஹர் சுல்தான் வழங்கிய நிலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. ஆத்ம லிங்கம் கருவறையின் மையப்பகுதி சிவனுக்கு ஆகும், அதில் பக்தர்கள் ரோஸ் வாட்டர் ஊற்றி பிரார்த்தனை செய்கின்றனர். கோபுரம் அருகில் 10 தங்கத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள் உள்ளன. அவைகள் சிவன், பிரம்மா, அனுமன், துர்கா, இராஜகாளியம்மன், விநாயகர், கிருஷ்ணர், விஷ்ணு, சாய்பாபா, கெளதம புத்தர் மற்றும் பிற மூர்த்திகள்.
சிறப்பு அம்சங்கள்
மியான்மரைச் சேர்ந்த ஒன்பது கைவினைஞர்கள் 2 வருடங்கள் எடுத்து கோவிலின் 95% ஓடுகளை செய்ய நேர்த்தியான வண்ணக் கண்ணாடியால் ஆன வடிவமைப்புகளைக் செய்துள்ளனர். கோயிலை உள்ளடக்கிய 1 மில்லியன் கண்ணாடித் துண்டுகள் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா மற்றும் வெள்ளை ஆகிய ஆறு வண்ணங்களைக் கொண்டுள்ளது. இந்த கோவிலின் தனித்துவமான அம்சம் அதன் ஆக்கப்பூர்வமான, சிக்கலான மற்றும் நேர்த்தியான கண்ணாடி வேலை. ஜோஹரின் தனித்துவமான கண்ணாடி கோவில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்களைப் ஈர்க்கிறது.
காலம்
1922 இல் கட்டப்பட்டது
நிர்வகிக்கப்படுகிறது
மலேசியா
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லோரங்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஜோஹர் பஹ்ரு
அருகிலுள்ள விமான நிலையம்
ஜோஹர் பஹ்ரு