சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில், கருர்
முகவரி :
சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்,
சோமூர், மண்மங்கலம் தாலுகா,
கருர் மாவட்டம் – 639114.
இறைவன்:
சோமேஸ்வரர் என்ற திருநோம்பலூர்மகாதேவர்
இறைவி:
மனோண்மனி அம்பாள்
அறிமுகம்:
கருர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா சோமூரில் இருக்கு, கருரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இருக்கும் இக்கோவிலுக்கு கரூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இக்கோவில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளுக்கு இடையே மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக கோவில்களில் கருவறை சிறிய அமைப்பாகவும் அர்த்த மண்டபம் பெரிய அளவுடையதாகவும் இருக்கும் ஆனால் இந்தக்கோவலில் மட்டும் கருவறை பெரிய அமைப்பாகவும் அர்த்த மண்டபம் சிறியதாகவும் அமைத்துள்ளனர். இக்கோவிலில் தனித்தனி பிராகாரங்கள் இல்லாததால் 2010 ஆம் ஆண்டு விநாயகர், முருகன், நால்வர், அம்பாள், நவக்கிரகம் வைக்க கட்டிடப்பணிகள் செய்தனர், 90 சதவீதம் வேலை முடிந்துவிட்டது, ஆனாலும் திருப்பணியை நிறைவு செய்து கும்பாபிஷேகம் செய்து முடிக்க இயலவில்லை. கோவிலின் மேல் தளத்தில் ஒரு அரச மரம் வளர்ந்து அர்த்த மண்டபத்தை சேதப்படுத்தி அதன் வேர்கள் தரைப்பகுதி வரைக்கும் வளர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
புராண முக்கியத்துவம் :
தஞ்சை பெரிய கோவில் அமைப்பில் இரண்டு மிகப்பெரிய துவார பாலகர்கள் அர்த்த மண்டபத்தின் வாயிலில் வைத்துள்ளனர். இரண்டும் பார்க்க ஒரே அமைப்பாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையிலே சின்னச்சின்ன மாற்றங்களைப் பார்க்கலாம். கருவறையின் பிரஸ்தரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு அழகிய நந்தி சிலைகளை காண முடிகிறது. இத்தகைய அமைப்பு இப்பகுதியிலுள்ள வேறு சிவாலயங்களில் இல்லை. இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பைப் போல ஸ்தூல லிங்க அமைப்பைப் போல அமைத்துள்ளனர். கோவிலின் உச்சி கோபுரம் வரையிலும் லிங்க அமைப்பிலும் மையத்தில் மேற்கு நோக்கி வட்டவடிவ சிவலிங்கத்தை அமைத்துள்னர். முற்காலத்தில் கற்கோவிலாகவும் விமானம் செங்கற்களால் கட்டியும், காலப்போக்கில சேதமடைந்ததால்பிற்காலத்தில் திருப்பணி செய்துள்ளனர்.
மூலவருக்கு வலது இடமாக இருக்க வேண்டிய விநாயகர் முருகர் சிலைகளுக்கு பதிலாக பெரிய அளவில் ஒரு விநாயகர் சிலை மட்டும் இருப்பது சிறப்பு. அர்த்த மண்டபத்திலேயே மனோண்மனி அம்பாள் உள்ளார். இங்கிருக்கும் நந்தி வலது பக்கமாக சாய்ந்த அமைப்பில் சோமேஸ்வரரை தரிசிப்பது போல பெரிய அமைப்பாக உள்ளது. கொஞ்சம் மேற்காக வராகி அம்மன் சிலை மற்றும் மகேஷ்வரி அபிராமியின் சிலைகளும் ஒரு வில்வங்கன்றும் உள்ளது. இந்த இடம் தான் இக்கோவிலை இன்னும் முன்னோக்கி அழைத்துச்செல்கிறது, இங்கே இருக்கும் ஒரு கற்சிலையானது முற்காலப்பாண்டியர்களின் ஆட்சியில் முருகக்கடவுளாக வைத்து வழிபாடு செய்ய்பட்ட சிலை. கோவிலுக்கு மேற்கே பார்த்தால் மிகப்பழமையான நந்தி சேதமடைந்த நிலையில் உள்ளது.
கோவில் ஒரு தள அமைப்புடைய கற்றளிக்கோவிலாக இக்கோவிலைக் கட்டியுள்ளனர். கருவறையை சுற்றிலும் கோஷ்டத்தில் தெற்குபக்கமாக பெரிய அளவில் தட்சிணா மூர்த்தி சிலையும், கிழக்கு பக்கமாக முருகன் சிலையும், வடக்குப்பக்கத்தில் பிரம்மாவின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சோமூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கருர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை