சோத்துப்பாக்கம் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி
சோத்துப்பாக்கம் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), சோத்துப்பாக்கம், சித்தாமூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603319.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ சோமநாதீஸ்வரர் இறைவி : ஸ்ரீ சிவகாமி
அறிமுகம்
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மேல்மருவத்தூர் அருகில் உள்ளது சோத்துப்பாக்கம் கிராமம். சில ஆண்டுகள் முன்பு இவ்வூரில் உள்ள ஒரு அன்பர் புத்திரபாக்கியம் வேண்டி ப்ரச்னம் பார்த்தபோது இங்கு ஒரு அரச மரத்தடியில் வெட்ட வெளியில் இருக்கும் சிவலிங்கம் நந்தி இவைகளுக்கு ஆலயம் எழுப்பும்படி அருள்வாக்கு வந்தது. அதன்படி அந்த அன்பர் சிவாலயம் எழுப்பி இன்னும் சில தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த அன்பரின் மகனுக்கு உடனே புத்திர பாக்கியம் ஏற்பட்டது. ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீ சோமநாதீஸ்வரர். அம்பாள் திருநாமம் ஸ்ரீ சிவகாமி. இன்றும் இங்கு நாகம் ஓன்று தினந்தோறும் வந்து இறைவனுக்கு வழிபாடு செய்கிறது. தினசரி ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. சிவனுக்கு மூன்று கோஷ்டம், அம்பாளுக்கு மூன்று கோஷ்டத்துடன் விளங்கும் இக்கோயிலில் குபேரன், ஐஸ்வர்யேஸ்வரர், மஹாலக்ஷ்மி சன்னதி உண்டு. படிக்கட்டுடன் ஆலய திருக்குளம் உள்ளது. தொடர்புக்கு திரு பாலச்சந்திரன் ரெட்டியார்- 9443336777, திரு குருநாதன்-9445271190, திரு முருகன்-9751853418. எல்லா சிவாலய உற்சவங்களும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.
நம்பிக்கைகள்
பரிகார தலம்: நாக தோஷம் விலகவும், குழந்தை பேறு கிடைக்கவும், வியாபார அபிவிருத்தி அடையவும் இத்தலம் வந்து ஏகாதசி, திரியோதசி, பௌர்ணமி, அம்மாவாசை நாட்களில் 21 தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் பிரார்த்தனை நிறைவேறும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சோத்துப்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மேல்மருவத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை