சோத்திரியம் காலஹச்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
சோத்திரியம் காலஹச்தீஸ்வரர் சிவன்கோயில்,
சோத்திரியம், சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609201.
இறைவன்:
காலஹச்தீஸ்வரர்
அறிமுகம்:
சோத்திரியம் என்பது சுரோத்திரியம் என்பதன் திரிபு. சுரோத்திரியம் என்றால் வேதம் ஓதுவோர்க்கு விடப்பட்ட வரியிலி நிலம் ஆகும், அதனை அவர்கள் இருக்கும் காலம் வரை அனுபவிக்கலாம். இந்த சுரோத்திரியங்கள், சுரோத்திரியதாரரின் வழித் தோன்றல்களுக்கு உரிமையுடையனவல்ல அது மட்டுமன்றி சுரோத்திரியங்கள், தருவதற்கு முன், தரிசு நிலங்களாக இருந்தன, அவற்றை திருத்தி அனுபவித்தனர். இப்படி மராட்டிய மன்னர்கள் காலத்தில் பல இடங்களில் சுரோத்திரியங்கள் தரப்பட்டு இருந்தன, அவற்றில் ஒன்று சீர்காழியின் மேற்கில் 11 கிமீ தூரத்தில் கொண்டல் கிராமத்தின் அருகில் கொள்ளிடத்தின் தென் கரையோரம் உள்ளது.
இந்த கிராமத்தில் இருந்த சிவாலயம் சிதைவடைந்த பின்னர் மீதமிருந்த ஒற்றை லிங்க மூர்த்தியை மட்டும் எடுத்து அழகிய தகர கொட்டகை ஒன்றில் இருத்தி மேடை அமைத்து கோயிலாக்கி உள்ளனர். இறைவன் – காலஹச்தீஸ்வரர் பெரிய அளவிலான லிங்க மூர்த்தியாக உள்ளார், எதிரில் ஒரு சிறிய நந்தியும் பலிபீடமும் உள்ளன. வடக்கு நோக்கி ஒரு துர்க்கை ஒன்றை வைத்துள்ளனர். இந்த இரு மூர்த்திகளும் மட்டுமே காணக்கிடைத்தவை எனலாம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சோத்திரியம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி