சொக்கனாவூர் சிவன் கோயில், தஞ்சாவூர்
முகவரி
சொக்கனாவூர் சிவன் கோயில், சொக்கனாவூர், மதுக்கூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614017.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டம், மதுக்கூரில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறு கிராமம் சொக்கனாவூர். இங்குள்ள சிவன் கோயில் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. செங்கல் கட்டுமானத்துடன் காணப்படும் இக்கோவில் பல ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு, தற்போது மீண்டும் சிதிலமடைந்து உள்ளதாக தெரிகிறது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனி கருவறையுடன் கோவில் உள்ளது. தற்போது மேற்கூரை இல்லாமல் மண்டபத்தில் மரமே குடையாக அதன் நிழலே மண்டபமாக சிவபெருமான், இரண்டு அம்பாள், வள்ளி-தெய்வானையுடன் முருகன் சண்டிகேஸ்வரர், நந்தி,விநாயகருடன் அருள்பாளிக்கிறார். ஒரு நேர வழிபாடு நடப்பதாக தெரிகிறது அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டபோது திருப்பணிக்காக ஊர்மக்கள் வசூல் செய்ய ஆரம்பித்ததாகவும் பின்னர் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டதாகவும் கூறினார். இறைவன் இறைவன் பெயர் தெரியவில்லை. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சொக்கனாவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பட்டுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி