செருவலூர் நாகேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி
செருவலூர் நாகேஸ்வரர் சிவன் கோயில், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609503
இறைவன்
இறைவன்: நாகேஸ்வரர்
அறிமுகம்
மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் பூந்தோட்டம்- முடிகொண்டான் இடையில் ஒரு கிமீ. தூரம் கடந்ததும் வலது புறம் காளியம்மன் கோயில் ஆர்ச் உள்ளது அதன் வழி சென்றால் செருவலூர் அடையலாம். திருமலைராஜன் ஆற்றின் வடகரையில் உள்ளது இந்த செருவலூர். சிறிய அழகிய கிராமம் ஊரின் முகப்பில் பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் கரையில் ஒரு புதிய விநாயகர் கோயிலும் அருகில் ஒற்றை கருவறை கொண்டதாக சிவன் கோயிலும் உள்ளது. முன்பு பெரிய கோயிலாக இக்கரையில் இருந்த சிவாலயம் இடிந்து சிதைந்து விட அதில் இருந்த விநாயகருக்கு ஒரு கோயிலும் இறைவன் நாகேஸ்வரருக்கு ஒரு கோயிலும் கட்டி வைத்துள்ளார்கள். முருகன் பெயரால் இவ்வூர் முற்காலத்தில் செவ்வேள் ஊர் எனப்பட்டது. தற்போது மருவி செருவலூர் என அழைக்கப்படுகிறது. நாகங்கள் வழிபட்டதால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என பெயர். நாக தோஷத்தினர் விளக்கேற்றி வழிபட்டு பயன் பெறலாம். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செருவலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி