செய்யூர் ஸ்ரீ வல்மீகநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி
செய்யூர் ஸ்ரீ வல்மீகநாதர் திருக்கோயில், (பரிகார தலம்) செய்யூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603302.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ வல்மீகநாதர் இறைவி : ஸ்ரீ முத்தாம்பிகை
அறிமுகம்
சென்னை- பாண்டி ECR ,சாலையில் எல்லை அம்மன் பேருந்து நிறுத்தம் . அங்கிருந்து 5 கி.மீ. மேற்கில் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். சுயம்பு மூர்த்தியாக தோன்றி, ஸ்ரீ வல்மீகநாதர் என்ற திருநாமம் பூண்டு செய்யூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார் சிவபெருமான். அம்மையின் திருநாமம் ஸ்ரீ முத்தாம்பிகை. நான்கு கரத்துடன் அருள் வடியும் முகத்தோடு காட்சி அளிக்கிறாள். துவார சன்னதியுடன் அமைந்த ஆலயம். இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இவ்வாலயத்தில் கொடி மரம் நந்தி தேவரை தரிசித்து தெற்கு வாயில் வழியாக உள்பிரகாரம் வந்து சுமுகன், சுதேகன் என்ற துவாரபாலர்களை வணங்கி உள்ளே வந்தால் சுயம்பு மூர்த்தியான இறைவனை மனதார தரிசிக்கலாம். . உள் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகர், வள்ளி தேவசேனா தேவிகளுடன் ஸ்ரீ முருகன், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ வேதகிரீஸ்வரர், ஸ்ரீ வேணுகோபால சுவாமி சன்னதிகள் உள்ளன. சிவ கோஷ்ட மூர்த்திகள், பைரவர், சூரியன் கஜ லக்ஷ்மி ஆகிய சன்னதிகளை தரிசித்துக்கொள்ளலாம். வழக்கத்திற்கு மாறாக நவக்கிரக சன்னதி தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆலய திருக்குளம் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. தல விருட்சம் வில்வம். காசிக்கு நிகரான தலம் என்று போற்றப்படுகிறது. உத்திர நட்சத்திரம் கொண்டவர்கள் தரிசிக்க வேண்டிய தலம். சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் தூண்களில் பல வித சிற்பங்கள் காணப்படுகின்றன. குதிரை மீது இருக்கும் பெண் சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்வதாக உள்ளன. வெளி பிரகாரத்தில் சப்த கன்னிகை சன்னதி இருக்கிறது. இரு வேளை பூஜை நடைபெறுகிறது. ஆலய அர்ச்சகர் திரு சந்திரசேகர குருக்கள்., திரு சக்தி தரன் குருக்கள்-9444729512 ஐயாமணிசிவம் -9965653006
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கூவத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை