செம்மங்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
செம்மங்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
செம்மங்குடி, நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612603.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
கும்பகோணம் – கொல்லுமாங்குடி சாலையில் 23வது கிமீ-ல் உள்ளது ஸ்ரீகண்டபுரம், இங்குள்ள Shell petrol bunk எதிரில் செல்லும் சாலையில் மூன்று கிமீ தூரம் தெற்கில் சென்றால் செம்மங்குடி உள்ளது. திருவீழிமிழலை வடக்கில் உள்ள அன்னியூர் சென்று கிழக்கில் ஒரு கிமீ சென்றாலும் இவ்வூரை அடையலாம். பல செம்மங்குடிகள் இம்மாவட்டத்தில் உள்ளன. குபேரன் சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவர். பல காலமாக வெளியுலகம் அறியாமல் சிதைந்து இருந்த சிவாலயம் தற்போது புதியதாக கட்டப்பட்டு பொலிவுடன் உள்ளது. கிழக்கு நோக்கிய சிவாலயம் அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். இறைவன்-சுந்தரேஸ்வரர் இறைவி-சௌந்தரநாயகி கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளார்கள். இறைவனின் முன்னர் ஒரு பெரிய மண்டபம் மற்றும் ஒரு நீண்ட தகரகொட்டகை ஒன்றும் கட்டப்பட்டு உள்ளது. கருவறை கோட்டத்து தெய்வமாக தென்முகன் மட்டும் உள்ளார். வடபுறம் சண்டேசரும் ஒரு மரத்தடியில் அழகிய லிங்கம் ஒன்றும் உள்ளது. குபேரனை நினைவு கூறும் விதம் சுதைகளோ சிற்பங்களோ இல்லை.
புராண முக்கியத்துவம் :
ஒருமுறை அவர் சிவபெருமானை நோக்கி நீண்ட தவம் புரிய, அந்த தவத்தை மெச்சிய சிவனும் பார்வதியும் அவரை உலக செல்வங்களுக்கு எல்லாம் அதிபதியாக்கினர். ”குபேரா …..நீ உழைக்கின்ற மக்களின் வியர்வைக்கும் அவர்களின் விதிப்பயனுக்கும் தக்கவாறு நியாய தர்மத்துடன் இதனை வாரி வழங்கு” என கொடுத்துவிட்டார். திருமாலின் மனைவியான லெட்சுமி, தனம், தான்யம், சந்தானம் சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மனஅமைதி. உள்ளிட்ட எட்டு சக்திகளை பெற்றிருந்தார், அதனை சங்கநிதி, பதுமநிதி என்ற இருவரிடம் ஒப்படைத்தாள்., குபேரன் தான் பெற்ற உலக செல்வங்களுக்கு இந்த இரண்டு நிதிகளையும் வலது இடது கரமாக கொண்டு அனைத்தையும் இன்றுவரை அவர் காத்து வருகிறார். குபேரனும் சங்கநிதி பதுமநிதியும் வந்து வழிபட்ட தலம் இதுவாகும். அதனால் சங்க-பதுமநிதி குடி என அழைக்கப்பட்டு இப்போது செம்மங்குடி ஆகியுள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செம்மங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி