செம்பனார்கோயில் உமாமகேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/314791342_8240275639378807_993950943818362220_n.jpg)
முகவரி :
செம்பனார்கோயில் உமாமகேஸ்வரர் திருக்கோயில்,
செம்பனார்கோயில், தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609309.
இறைவன்:
உமாமகேஸ்வரர்
இறைவி:
உமாமகேஸ்வரி
அறிமுகம்:
செம்பனார்கோயில்; மயிலாடுதுறையின் கிழக்கில் ஆக்கூர் சாலையில் பத்து கிமீ தூரத்தில் உள்ளது. திருசெம்பொன்பள்ளி எனப்படும் பாடல் பெற்ற தலத்தின் அருகில் பிரதான சாலையினை ஒட்டி உள்ளது இந்த சிறிய சிவன்கோயில். கோயில் முகப்பு அழகிய ரிஷபத்தின் மேல் அம்மையப்பன் சுதைகள் உள்ளன. கிழக்கு நோக்கிய இறைவன் உமாமகேஸ்வரர் சிறிய கருவறை கொண்டுள்ளார், இறைவி உமாமகேஸ்வரி தெற்கு நோக்கிய சிறிய கருவறை கொண்டுள்ளார். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். சிறிய நந்தி பலிபீடம் உள்ளது. சுற்றி வர இடமுள்ளது, அதில் வடபுறம் சண்டேசர் உள்ளார். காசியில் இருந்து கொணரப்பட்ட லிங்க பாணன் கொண்டு உருவாக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/313421034_8240275529378818_4336580873377227895_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/313949201_8240275556045482_430877654000773888_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/314668524_8240275669378804_6570823787843133792_n-771x1024.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செம்பனார்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி