செங்கமங்கலம் முகலிங்கேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
செங்கமங்கலம் முகலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
செங்கமங்கலம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611108
இறைவன்:
முகலிங்கேஸ்வரர்
அறிமுகம்:
கீவளூர் – சிக்கல் சாலையில் உள்ள ஆழியூர் பிரிவில் திரும்பி சிராங்குடி புலியூர் வழியாக மூன்று கிமீ வந்தால் செங்கமங்கலம். அல்லது சிக்கலின் நேர் வடக்கில் குற்றம் பொறுத்தான் இருப்பு வழி வந்தால் இரண்டு கிமீ தூரம் தான். பௌத்தம் பெரிய அளவில் இருந்த காலகட்டத்தில் சங்கமங்கலம் என பௌத்த மக்கள் வாழ்விடமாக இருந்த ஊர் தான் இது இப்போது செங்கமங்கலம் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன, ஊரின் மையத்தில் உள்ளது இந்த முகலிங்கேஸ்வரர் திருக்கோயில் சமீபத்திய வருடங்களில் உருவாக்கப்பட்ட திருக்கோயில் தான் இது.
சாலையோரத்தில் ஒரு கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ளது இந்த கோயில் தேவி கிருஷ்ணகுமாரி எனும் பெண்மணியும் அவரது கணவரும் சேர்ந்து உருவாக்கிய சிறிய ஒற்றை கருவறை கோயில் தான் இது. பூஜையும் இருவரும் சேர்ந்தே செய்து வந்துள்ளனர். சென்ற வருடத்தில் அவர் காலமாகிவிட பெண்மணி மட்டும் தன்னால் இயன்ற கைப்பொருள் கொண்டு இறைவனை பூஜித்து வருகின்றார். கிழக்கு நோக்கிய கோயில், இறைவன் பாணத்தில் அழகிய முகம் கொண்டு பார்க்க அருமையான வடிவில் உள்ளார். அவரின் முன்னர் கருங்கல்லால் ஆன ஒரு மகாமேரு உள்ளது இறைவன் எதிரில் நந்தியும் பலிபீடமும் கருவறைக்கு வெளியில் உள்ளது. முகப்பில் தகர கூரை ஒன்று நந்திக்கு மேல் அமைத்துள்ளனர். அன்றாடம் பொருளீட்டும் பணியின் சிரமத்தில் இருக்கும் இப்பெண்மணி எண்ணை பால் போன்ற நித்திய பூஜை பொருட்களுக்கு உங்கள் அனைவரின் உதவியையும் எதிர்பார்க்கின்றார். இவரது (Devi krishnakumari 89408 39809) கைபேசியில் தொடர்பு கொண்டு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காலம்
300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி