சீர்காழி பதினெண்புராணேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
பதினெண்புராணேஸ்வரர் திருக்கோயில்,
சீர்காழி நகர்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609110.
இறைவன்:
பதினெண்புராணேஸ்வரர்
இறைவி:
வாகீஸ்வரி
அறிமுகம்:
சீர்காழியின் மையப்பகுதியில் உள்ளது சட்டநாதர் கோயில், இந்த பெரியகோயிலின் நாற்புறங்கள் தேரோடும் சாலைகள் அமைந்துள்ளன. இதன் வடகிழக்கு மூலையில் உள்ளது ஈசான்யதெரு. இந்த தெருவில் கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக பதினெண் புராணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பதினெண் புராணங்களை ஒன்றிணைக்கும் பணிகளில் புலவர்கள் ஈடுபட்ட போது சிவபெருமான் புராணங்களை ஒன்றிணைக்கும் தலைவர் ஆக இருந்ததாக வரலாறு, இதனால் அவருக்கு பதினெண் புராணேஸ்வரர் என பெயர்.
இந்த பழைமையான இந்த ஆலயம் சிதிலமடைந்து, ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்த நிலையில் கடந்த ஓராண்டாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சமீபத்தில் நடைபெற்றது. இறைவன் கிழக்கு நோக்கிய தனி கருவறை கொண்டுள்ளார், அம்பிகை வாகீஸ்வரி எனும் திருநாமம் கொண்டு தனி சன்னதியாக தெற்கு நோக்கிய கருவறை கொண்டு விளங்குகிறார். இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார், கருவறை வாயிலில் அழகான விநாயகரும் முருகனும் உள்ளனர். இறைவன் எதிரில் அழகிய நந்தி உள்ளது. பிரகார ஆலயங்களோ கோஷ்ட மூர்த்திகளோ இல்லை, சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். ஒரு வேம்பின் கீழ் மூன்று நாகர்கள் உள்ளனர். எளிமையான கோயில், அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில். மாலை நேரத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி