சிவனாண்டார் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
சிவனாண்டார் சிவன்கோயில்,
சிவனாண்டார், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் உள்ள பாங்கல் நாலுரோட்டில் இருந்து திருநெல்லிக்கா சென்று அதன் வடக்கில் செல்லும் வெண்ணாற்றின் கரையில் மூன்று கிமீ தூரம் சென்று பின் செருவாமணி அருகில் சிறிய பாலம் வழி வெண்ணாற்றை தாண்டினால் இந்த சிவனாண்டார்கோயில் அடையலாம். பாங்கலில் இருந்து பத்து கிமீ தூரம் இருக்கும்.
ஒரு காலத்தில் பெரிய கோயிலாக இருந்த இந்த கோயில் இன்று இடிந்த நிலையில் ஊரின் வடபுறம் தனித்து உள்ளது. சில அடியார்கள் தங்கள் கைங்கர்யமாக அதில் இருந்த லிங்க மூர்த்திகளை எடுத்து தனியே ஒரு தகர கொட்டகையில் வைத்து பூஜிக்கின்றனர். ஒரு பெரிய லிங்கமூர்த்தியை மேற்கு நோக்கியதாக வைத்து நாகநாதர் என பெயரிட்டு உள்ளனர். அவரது சன்னதி வாயிலில் சிறிய விநாயகர் ஒருவரும் சிறிய பாலமுருகனும் உள்ளனர். சண்டேசர் ஒருவரும் சிறிய நந்தி ஒருவரும் உள்ளனர். இக்கருவறை பின்புறம் இரு லிங்க பாணன்களும் இரு நந்திகளும் உள்ளன. பல நூறாண்டுகளாக பல நூறு மக்களின் உழைப்பில் உருவான ஒரு கோயில் நம் கண்முன்னே சிதைந்து கிடப்பதை காண சகிக்கவில்லை, இனியாவது கட்டணம் கட்டி வரிசையில் நிற்கும் கோயில்களை தவிர்த்து கிராமங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவர்களை கண்டு வழிபடுவோம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிவனாண்டார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி