Monday Jul 15, 2024

சிறுசேரி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

சிறுசேரி சிவன்கோயில், சிறுசேரி, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 103.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

சிறுசேரி தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, சென்னையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, ஓர் புறநகர்ப் பகுதியாகும். சென்னையிலிருந்து தெற்கே 30 கிமீ தொலைவில் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் நாவலூருக்கும் கேளம்பாக்கத்திற்கும் இடையே இச்சிற்றூர் அமைந்துள்ளது.சென்னை கேளம்பாக்கம் அருகாமையில் உள்ள இச்சிற்றூரில் அமைந்துள்ளது இந்த ஆலயம். வட்ட வடிவ விமான அமைப்புடன் முன்பு இருந்த கற்கோயிலில் வாசம் செய்த ஈசன் தற்போது சிறிய கொட்டகையில் தரிசனம் தருகிறார். சதுர பீடத்தில் கிழக்கு நோக்கிய பெருமான். அருகிலேயே அம்பாள். திருநாமம் தெரியவில்லை. எதிரில் நதியம்பெருமான். தேய்ந்த நிலையில் வெளியில் இருக்கும் .சண்டிகேஸ்வரர். ஒரு வேளை பூஜை இங்கு ஒரு அடியார் செய்து வருகிறார். திருக்குளம் எதிரில் காணப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிறுசேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தாம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top