சிறுகுன்றம் ஸ்ரீ வால்மீகீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி
சிறுகுன்றம் ஸ்ரீ வால்மீகீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), சிறுகுன்றம், செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603108.
இறைவன்
இறைவன் : ஸ்ரீ வால்மீகீஸ்வரர் இறைவி : ஸ்ரீ கேதார கௌரி
அறிமுகம்
ஆதியில் சிவக்குன்றம் என்றும் தற்போது சிறுகுன்றம் என்று அழைக்கப்படும் கிராமத்தில் ஒரு காலத்தில் ஏழு சிவாலயங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவைகள் எல்லாம் இல்லாத நிலையில் ஸ்ரீ வால்மீகீஸ்வரர் சிவன் கோயில் மட்டும் எஞ்சியுள்ளது. ஸ்ரீ வால்மீகி முனிவர் வழிபட்டதால் இறைவன் இத்திருநாமத்தோடு அருள்புரிகிறார். அம்பாள் திருநாமம் ஸ்ரீ கேதார கௌரி. முனிவர் ஏழு சிவலிங்கங்களை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார். தற்போது நான்கு மட்டும் காணப்படுகிறது. சிரித்த முகத்துடன் காணப்படும் நந்தி தேவரை தரிசித்து உள்ளே சென்றால் மகாமண்டபத்தில் விநாயகரும் வள்ளி தேவசேனா சமேத முருகனும் காட்சி கொடுக்கின்றனர். பஞ்ச கோஷ்டத்துடன் அமைந்துள்ள இக்கோயிலில் அம்பாள் கோஷ்டத்தில் சனீஸ்வரர் உள்ளது சிறப்பாகும். ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு ஏகாம்பர சிவாச்சாரியார்-9176867741, திரு விஜய பிள்ளை-9908806716.
நம்பிக்கைகள்
பரிகார தலம் குழந்தை பேறு, திருமணம் கூடவும், கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கவும் இக்கோயில் பரிகார தலமாக விளங்குகிறது. முக்கியமாக கேன்சர் வியாதி குணமாக இத்தலத்து ஈசன் அருள்புரிகிறார்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிறுகுன்றம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை