சிராங்குடிபுலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
சிராங்குடிபுலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில்,
சிராங்குடிபுலியூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611104.
இறைவன்:
வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி:
சிவகாமி
அறிமுகம்:
கீவளுரில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் ஆழியூரில் இருந்து ஒரு சாலை நாகூர் செல்ல பிரிகிறது, அதில் அரை கிமீ சென்றால் சிராங்குடி புலியூர் உள்ளது. இறைவன் – வியாக்ரபுரீஸ்வரர், இறைவி – சிவகாமி சிவன் கோயில் கிழக்குநோக்கி செல்லும் சாலையில் கிழக்குப் பார்த்து உள்ளது. தென்புறத்தில் ஒரு வாயில் பிரதானமாக உள்ளது. வியாக்ரபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியவாறும், அம்பாள் தெற்கு பார்த்தும் கருவறை கொண்டுள்ளனர். இறைவன் முன்னர் ஒரு நீண்ட மண்டபம் உள்ளது. அதன் வெளியில் தான் நந்தி பலிபீடம் உள்ளது. தரை மட்டத்தில் இருந்து விதானம் வரை கருங்கல் கொண்டும் அதற்க்கு மேல் விமான பாகம் மட்டும் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார், வடக்கில் துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனித்த சன்னதியாக உள்ளது. பிரகாரத்தில் சிங்கார விநாயகர், அடுத்து நீண்ட மண்டபத்தில் (பிருத்வி) நிலம்; (அப்பு)- நீர் (தேயு)- நெருப்பு; (வாயு)-காற்று; (ஆகாயம்)- அண்டம், ஆகிய ஐந்து பெயருடைய லிங்கங்கள் உள்ளன. அடுத்து வடமேற்கில் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சன்னதிகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் தனி சன்னதி. பைரவர், சனி, சூரியன், வடகிழக்கு பாகத்தில் உள்ளனர்.
ஆலயம் மிக அழகுடனும், சுத்தமாகவும் பராமரிப்புடனும் உள்ளது. முறையான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. காமதேனு இத்தல இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம். இக்கோயிலில் மாலை நேர பூஜையில் நடராஜரை முதலில் பூஜை செய்த பின்னரே பிற தெய்வங்களை பூஜை செய்கின்றனர். இக்கோயிலை தக்ஷண சிதம்பரம் என அழைக்கின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிராங்குடிபுலியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி