சிம்லா காளிபாரி கோவில்

முகவரி :
காளி பாரி கோவில்,
பாந்தோனி மலை,
இமாச்சலப்பிரதேச மாநிலம் – 171001.
இறைவி:
சியாமளா
அறிமுகம்:
காளி பாரி கோவில் இந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவின் பாந்தோனி மலையில் அமைந்துள்ளது. இந்துக் கோயிலான இது சியாமளா என்று அழைக்கப்படும் காளி தேவியின் பயமுறுத்தும் மறுபிறவிக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாகவே நகருக்கு சிம்லா என்ற பெயரும் சூட்டப்பட்டது. இயாக்கூ மலைக்கு அருகில் காளி தெய்வம் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
நகரின் நடுவில் காளி பாரி கோயில் அமைந்துள்ளது. சிம்லாவின் பழைய பேருந்து நிலையம், ஆர்ட்ராக்கு, அன்னாடேல், இரயில்வே வாரியக் கட்டிடம், சிம்லா இரயில் நிலையம், சிறீ அனுமான் இயாக்கு ஆகியவற்றை கோயில் வளாகத்தில் இருந்து பார்க்கலாம். இந்த கோவில் சுற்றுலா பயணிகளையும் பக்தர்களையும் வெகுவாக கவர்கிறது
புராண முக்கியத்துவம் :
காளி பாரி கோயில் முதலில் 1845 ஆம் ஆண்டில் வங்காள பிராமணரான இராம் சரண் பிரம்மச்சாரி என்பவரால் இயாக்கூ மலையில் உள்ள உரோத்னி கோட்டைக்கு அருகில் கட்டப்பட்டது. அதனால்தான் இது கொல்கத்தாவில் உள்ள தட்சிணேசுவர் காளி கோயிலை ஒத்திருக்கிறது. காளி பாரி கோயில் நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும், மேலும் இது ஒரு தனித்துவமான இந்து பாணி கட்டிடக்கலை மற்றும் நீல நிற மரத்தாலான காளி தேவியின் சிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்னர், ஆங்கிலேயர்கள் கோயிலின் இருப்பிடத்தை பாண்டனி மலைக்கு மாற்றினர். 1902 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கோயிலின் அறக்கட்டளை முக்கியமாக வங்காள உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.



காலம்
1845 ஆம் ஆண்டு
பேருந்து நிலையம்
சிம்லா
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிம்லா
அருகிலுள்ள விமான நிலையம்
சிம்லா