சிதம்பரம் யோகபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி :
யோகபுரீஸ்வரர் திருக்கோயில்,
சிதம்பரம் நகரம்,
கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்:
யோகபுரீஸ்வரர்
இறைவி:
பார்வதிதேவி
அறிமுகம்:
தில்லையின் திக்கு கோயில்கள் முப்பத்திரண்டாகும் அதில் சில அழிந்து பட்டன, அவற்றில் இருந்த லிங்கமூர்த்திகள் சில தில்லைகோயிலில் இருப்பவை ஆகலாம். சிறு கோயில்களாக மாறியவை சில, அவற்றில் ஒன்று தான் தெற்கில் உள்ள யோகபுரீஸ்வரர் எனப்படுகிறது. இக்கோயிலின் இருப்பிடம் சீர்காழி சாலையில் உள்ள நந்தனார் ஆண்கள் மேல்நிலை பள்ளியை தாண்டியதும் சில நூறு மீட்டர்களில் இடதுபுறம் ஸ்ரீனிவாசா திருமணமண்டபம் உள்ளது அதனை ஒட்டி செல்லும் சிறிய தெருவில் சென்று முதல் வலது தெருவில் திரும்பினால் உள்ளது யோகபுரீஸ்வரர் கோயில் கிழக்கு நோக்கிய அழகிய சிறிய கோயில், நேர்த்தியாக கருங்கல் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. கிழக்குநோக்கி இறைவனும் இறைவி பார்வதிதேவி தெற்கு நோக்கியும் உள்ளார்கள். முகப்பு மண்டபம் ஒன்றுள்ளது அதில் நந்தி உள்ளார். சுற்றிலும் பூச்செடிகள் என நன்முறையில் உள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி