சிதம்பரம் குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி
அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்
இறைவன்: குபேரலிங்கேஸ்வரர்
அறிமுகம்
தில்லை பெருங்கோயிலின் முப்பத்துஇரண்டு திக்குகளில் லிங்கமூர்த்திகள் உள்ளனர். வடக்குதிக்கில் இருப்பவர் குபேரலிங்கம் என்னும் பெயருடன் அருள்கிறார். இடம் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள். வடக்கு வீதியில் திருப்பணி விநாயகர் கோயில் எதிரில் உள்ள ஒரு நெல்அரவை மில்–ன் வளாகத்தில் கிழக்கு நோக்கிய சிறிய சிவன்கோயிலாக உள்ளது குபேரலிங்கேஸ்வரர் கோயில். இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார் அவரின் பின்புறம் இரு விநாயகர்கள் உள்ளனர். இதுவும் பழம்பெரும் கோயிலின் மீதம் என்றே சொல்லவேண்டும். புதிதாய் ஒரு ஆஞ்சநேயர் புதிய ஒட்டாக ஒரு மாடத்தில் உள்ளது. இந்த குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் அமைதியும்,மகிழ்ச்சியும் நிலவும். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி